உடுமலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர் சங்கத்தின் பேரவை மாநாடு - மருத்துவ காப்பீடு வழங்க தீர்மானம்

இந்திய தொழிற்சங்க சம்மேளனம் அலுவலகத்தில் நடைபெற்ற தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் பேரவை மாநாட்டில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: உடுமலையில் நடந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளர் சங்கத்தின் பேரவை மாநாட்டில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நேரு வீதியில் உள்ள இந்திய தொழிற்சங்க சம்மேளனம் அலுவலகத்தில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் பேரவை மாநாடு நடைபெற்றது.



மாநாட்டில் தேங்காய் உரிப்பதற்கு நியாயமான விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் மேலும் வட மாநில தொழிலாளர்கள் குறைந்த அளவு கூலி பெற்றுக் கொண்டு தேங்காய் உரிக்கும் தொழிலை ஈடுபட்டு வருவதால் ஆயிரக்கணக்கான தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் வாழ்வாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது எனவே தமிழக அரசு தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் மேலும் மருத்துவ காப்பீடு அனைவருக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.



பேரவை மாநாட்டில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் அப்பாஸ், உடுமலை நகர செயலாளர் தெய்வகுமார், தொழிற்சங்கம் மாவட்ட அமைப்பாளர் பால் நாரயணன், குடிமங்கலம் சுந்தர்ராஜன் மற்றும் உடுமலை குடிமங்கலம் நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...