ரோடு பணிகளுக்கு ப்ரீ பிக்சிங் டெண்டர் - ஒப்பந்ததாரர்கள் எதிர்ப்பு

ரோடு பணிகளுக்கு செட்டிங் டெண்டர் நடைமுறை கூடாது என்றும் முறையாக விண்ணப்பங்கள் திறந்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்ததாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: ஒப்பந்த விண்ணப்பங்கள் திறக்கப்படும் முன்பே ஃப்ரீ பிக்சிங் நடைமுறையை கொண்டு வருவது சரியல்ல. முறைகேடு நடந்தால் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அரசு நிர்வாகத்திற்கு புகார்கள் தெரிவிக்கப்படும் என ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை மற்றும் திருப்பூர் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் கோவை திருப்பூர் ஈரோடு கரூர் மாவட்டங்களில் சென்டர் மீடியன், தடுப்பு சுவர் , சிறு பாலம், மழை நீர் வடிகால் மற்றும் சாலை பாதுகாப்பு பணிகளுக்காக இ டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 200 கோடி ரூபாய்க்கு 9 பேக்கேஜ்களாக திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டது. நேற்று மதியம் 3 மணிக்கு டெண்டர் திறக்கப்பட்டு விண்ணப்பங்கள் இறுதிசெய்வதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படும் முன்பே சிலருக்கு குறிப்பிட்ட பணிகளை முடிவு செய்து ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து செட்டிங் டெண்டர் நடைமுறை கூடாது. முறையாக விண்ணப்பங்கள் திறந்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு முறைகேடுகள் நடப்பதற்கு நெடுஞ்சாலைத் துறையினர் அனுமதிக்க கூடாது. ஒப்பந்த விண்ணப்பங்கள் திறக்கப்படும் முன்பே ஃப்ரீ பிக்சிங் நடைமுறையை கொண்டு வருவது சரியல்ல. முறைகேடு நடந்தால் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அரசு நிர்வாகத்திற்கு புகார்கள் தெரிவிக்கப்படும் என ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் கூறுகையில்," அவிநாசி திருப்பூர் பல்லடம் மீன் கரை ரோடு நான்கு வழி பாதையாக விரிவாக்கம், சத்தி பவானி ரோடு, ஈரோடு பெருந்துறை காங்கேயம் ரோடு, பல்லடம் தாராபுரம் ரோடு, ஈரோடு கரூர் மற்றும் ஈரோடு ரிங் ரோடு போன்ற பணிகள் ப்ரீ பிக்சிங் முறையில் ஒப்படைத்து விட்டதாக தகவல் வந்துள்ளது.

இந்த நடைமுறைக்கு எதிராக புகார் தரப்பட்டுள்ளது. ஃப்ரீ பிக்சிங் நடைமுறை மூலமாக லஞ்சம் முறைகேடு அதிகமாகிவிடும். கோவையில் தரமற்ற ரோடுகள் தொடர்பாக புகார்கள் அதிகமாகி வருகிறது. இதை மேலும் உறுதி செய்யும் வகையில் ஒப்பந்த ஒதுக்கீட்டில் முறைகேடு செய்வது ஏற்கக் கூடியது அல்ல," என்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...