பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் - கோவையில்  பயிற்சி தகவல் பலகை  திறப்பு

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகக்‌ கூட்ட அரங்கில்‌ மாநகராட்சி அலுவலா்களுக்கு பாலியல்‌ துன்புறுத்தல்‌ தடுப்பு சட்டம்‌ 2013 குறித்து பயிற்சி தகவல்‌ பலகையை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ திறந்து வைத்தார்.


கோவை: பணியிடத்தில்‌ பாலியல்‌ தொடாபான வன்முறைகள்‌ நீங்கி அனைவரும்‌ நட்புறவோடு செயல்பட கோவை மாநகராட்சி நடவடிக்கை.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகக்‌ கூட்ட அரங்கில்‌ அரங்கில்‌ பாலியல்‌ துன்புறுத்தல்‌ தடுப்பு சட்டம்‌ 2013 குறித்து பணியாளர்‌ அனைவரும்‌ அறிந்து கொள்ளும்‌ வகையில்‌ தகவல்‌ பலகை வெளியிடுதல்‌ நிகழ்ச்சியில் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்களால்‌ தகவல்‌ பலகையை வெளியிட்டு, உறுதிமொழி எடுத்துக்‌ கொள்ளப்பட்டது.



சமூக மாற்றங்களும்‌ முன்னேற்றங்களும்‌ தொடர்ச்சியான ஒன்றாகும்‌. மனித குல வளர்ச்சிக்கு பொருளாதார மேம்பாடு மிகவும்‌ முக்கியமாக கருதப்படுகிறது.

இதைக்கருத்தில் கொண்டு பெண்களின்‌ முன்னேற்றம்‌, பொருளாதார விடுதலை அடங்கும்‌. பல ஆண்டு காலமாக சமூகத்தில்‌ நிலவி வரும்‌ மூடநம்பிக்கைகளும்‌ பிற்போக்கான சிந்தனைகளும்‌ பெண்களின்‌ முன்னேற்றத்திற்கு சமூக பண்பாடு தடைகளை இன்னும்‌ உருவாக்கி கொண்டுதான்‌ இருக்கிறது.

அதில்‌ ஒரு சவால்‌ தான்‌ பணியிடங்களின்‌ பெண்களுக்கு எதிராக ஏற்படும்‌ பாலியல்‌ வன்முறை. இதை தடுப்பதற்கான பல சட்டங்கள்‌ வந்தாலும்‌ பணியிடங்களில்‌ அதற்கான சிறப்பு சட்டம்‌ சமீபத்தில்தான்‌ விசாகா கமிஷனின்‌ விளைவாக உருவாக்கப்பட்டுள்ளது. POSH ACT 2013, (Prevention of Sexual Harassment) என்று அழைக்கப்படும்‌. இந்த சட்டம்‌ மூலமாக தற்போது ஒவ்வொரு தொழில்‌ நிறுவனங்களிலும்‌ பணியிடங்களிலும்‌ தங்களுக்கான உள்‌ கமிட்டியை உருவாக்கி அங்கு பணிபுரியும்‌ பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்தி வருகிறது.

இச்சட்டத்தின்‌ விழிப்புணாவு காரணமாக பணியிடங்களில்‌ பணிபுரியும்‌ அனைத்து பணியாளர்களும்‌ பாலியல்‌ துன்புறுத்தல்‌ குறித்து உணர்வூட்டப்பட்டு முற்போக்கான ஆரோக்கியமான நட்புறவோடு பணிபரியும்‌ சூழலை உருவாக்குகிறது. இன்னும்‌ பல பணியிடங்களில்‌ பலருக்கும்‌ சென்று சேரவில்லை என்பதே நிதாசனமான உண்மை. அதற்காகவே விழிப்புணாவு பயிற்சி அனைத்து பணியிடங்களிலும்‌ கட்டாயம்‌ செயல்படுத்த அரசாணைகளும்‌ பிறப்பித்து வருகிறது.

அந்த அடிப்படையில்‌ ஓவ்வொரு பணியிடத்திலும்‌ கட்டாயம்‌விழிப்புணர்வு பயிற்சி ஆண்‌, பெண்‌ பேதமின்றி அனைவருக்கும்‌ வழங்கப்பட வேண்டும்‌ என்பதே நோக்கமாகும்‌. இதை கருத்தில்‌ கொண்டு ஆசிய வளர்ச்சி வங்கிநிதியுதவியில்‌ தமிழ்நாடு நகர்ப்புற முதன்மை முதலீட்டுத்‌ திட்டத்தை செயல்படுத்தி வரும்‌ ஆளுமை மேம்பாடு மற்றும்‌ விழிப்புண்வு ஆலோசகர்‌குழுவில்‌ உள்ளபாலியல்‌ நிபுணர் முனைவர்‌.விஜயலட்சுமி மற்றும்‌ லார்துராஜ்‌ ஆகியோர்களின்‌ மூலம்‌ கோவை மாநகராட்சி அலுவலகத்தில்‌ பணிபுரியும்‌ பணியாளர்களுக்கு பாலியல்‌ துன்புறுத்தலை தடுக்கும்‌ குழு மற்றும்‌ புகார்‌ அளிப்பது தொடர்பாக அதற்காக அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும்‌ உட்குழு உறுப்பினாரகளுக்கு பாலியல்‌ துன்புறுத்தல்‌ தடுப்பு சட்டம்‌ 2013 குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

விழிப்புணர்வை பணியாளா்‌ மத்தியில்‌ உருவாக்க வழிவகை செய்து, தொடாந்து மண்டல அளவில்‌ மாநகராட்சி அலுவலா்களுக்கு பாலியல்‌ துன்புறுத்தல்‌ தடுப்பு சட்டம்‌ 2013 குறித்து விழிப்புணாவு ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன்‌ மூலம்‌ பணியிடத்தில்‌ பாலியல்‌ தொடாபான வன்முறைகள்‌ நீங்கி அனைவரும்‌ நட்புறவோடு செயல்படவும்‌ அதற்கான புகாரை அளிப்பதற்கு அனைவரும்‌ ஏதுவாக அமையும்‌ எனவும்‌ கூறினார்கள்‌.

இந்நிகழ்வின்போது மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.ச.செல்வசுரபி, தலைமை அதிகாரி (ம) மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்‌ .ஹேமலதா, உறுப்பினர்கள்‌ உதவி ஆணையார்‌(நிர்வாகம்‌) மாணிக்கம்‌, வருவாய்‌ அலுவலர்‌ மதுசூதனன்‌, பசுமைதூய்மை, கிரித்திகா, பாலியல்‌ நிபுணர்‌ முனைவா்‌.விஜயலட்சுமி, திரு.லூார்துராஜ்‌, மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...