சிம்ப்ளிசிட்டி சிறப்புப் பதிவு: துருவங்கள் பதினாறு இயக்குநர் கார்த்திக் நரேன்-யின் சில பகிர்வுகள்


துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் நரேன். துருவங்கள் பதினாறு கடந்த 2016 பிரதிமாதம் வெளியாகி தற்போதும் வெற்றிகரமாக ஓடிக்கொன்டிருக்கிறது. ரகுமான் நடிப்பில் வெளியான இப்படம் ஒரு மர்மம் நிறைந்த  குற்றப்படமாக வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது, இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வரும் மார்ச் 10ம் தேதியன்று வெளியாகவுள்ளது.



இந்நிலையில், கோவையில் செயல்பட்டு வரும் ஜி ஆர் டி கல்லூரியில் திரைப்பட விழாவான 'அவதார்' விழாவில் பங்கேற்ற இளம் இயக்குநர் கார்த்திக் நரேன், நமது சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் திரைத்துறையில் பல்வேறு விதமான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதில் சில...

நமது நிருபர்: இளம் இயக்குநராக நீங்கள் நிறைய தடைகளை சந்திருத்திருப்பீர்கள், வயது ஒரு தடையாக இருந்ததா ?

கார்த்திக் நரேன்- கண்டிப்பாக வயது ஒரு பிரச்சனையாக உள்ளது. 22 வயதைக் கடந்த என் மீது பல்வேறு சந்தேகங்களே ஏற்பட்டது. பலரும் வயது குறைவின் காரணமாக ஒரு படத்தை என்னால் இயக்க முடியுமா என்றே எண்ணினர். எனது திறமையை சந்தேகத்தினுடனேயே பலரும் பார்த்தனர். வயதின் காரணமாக தயாரிப்பாளர்கள் எனது படத்திற்கு முதலீடு செய்ய தயங்கினர். பின்பு எனது தந்தையே முன்வந்து எனது படத்திற்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டார்.

நமது நிருபர்: தற்போதுள்ள திரையுலகில் இளம் இயக்குநர்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது ?

கார்த்திக் நரேன்: இளம் இயக்குநர்களின் வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது. வெற்றிப்பாதையில் செல்வோரை பலரும் தாழ்த்தியே மதிப்பிடுகின்றனர். ஆனால், அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் நமக்கான பாதையில் இலக்கை நோக்கி சென்றுகொண்டே இருக்க வேண்டும். திரையுலகைப் பொருத்தவரை வெற்றி, தோல்வி என்பது நிலையில்லை. மக்களுக்கு நாம் சிறந்தவற்றை கொடுத்தால் அதுவே வெற்றியினை தீர்மானிக்கும்.

நமது நிருபர்: குறும்படங்கள் குறித்து உங்களது கருத்து என்ன ?

கார்த்திக் நரேன்: குறும்படங்கள் என்பது இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட திரையுலகினர்களுக்கு சிறந்த அடித்தளமாக அமைகிறது. திரையுலகில் வெற்றிபெற தொடர்ந்து புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

நமது நிருபர்: உங்களுடைய அடுத்த திரைப்படம் குறித்து கூறுங்கள் ?

கார்த்திக் நரேன்: எனது அடுத்த படம் 'நரகாசுரன்'. இந்த படத்தின் துணை தயாரிப்பாளர் கௌதம் வாசுதேவ் மேனன். இப்படம் ஒரு முழுநீள மர்மம் நிறைந்த  படமாகும்.

நமது நிருபர்: திரைத்துறையில் சாதிக்க உங்களுடைய கருத்து என்ன ?

கார்த்திக் நரேன்: இதற்கென தனியாக வெற்றி மந்திரம் எதுவும் கிடையாது. படம் சரியான முறையில் இயக்கப்பட்டிருந்தால் மக்களால் வெற்றி தானாக கிடைக்கும். படத்தின் கதை மற்றும் இயக்கம், இசை ஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாகும்.

நமது நிருபர்: நீங்கள் இயக்குநர் ஆகாவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் ?

கார்த்திக் நரேன்: எனது குறிக்கோள் மற்றும் வாழ்நாள் இலக்கு இயக்குநர் ஆவதே. அதற்காக நான் எனது கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டேன். அவ்வாறு நான் இயக்குநர் ஆகாவிட்டால் எனது கல்லூரிப் படிப்பையே தொடர்ந்திருப்பேன்.

நமது நிருபர்: திரைத்துறையில் எவ்வித பின்புலமும் இன்றி சாதனை படைக்க சிரமமாக இருந்ததா ?

கார்த்திக் நரேன்: பின்புலமின்றி சாதனை படைத்தது அவ்வளவு சிரமம் என கூறமுடியாது. இருப்பினும், பல்வேறு விதமான பின்புலங்களைக் கொண்டவர்கள் திரையுலகில் சாதிக்காமலும் இருக்கின்றனர். அவரவர் திறமையே சாதனைகள் படைக்க முக்கிய காரணங்கள் ஆகும்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...