வால்பாறையில் கனமழை - சோலையார் நீர்மட்டம் ஓரே நாளில் 3 அடி உயர்வு

கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்த கனமழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில், 3 அடி உயர்ந்துள்ளது.


கோவை: வால்பாறை பகுதிகளில் கடந்த தினங்களாக கனமழை பெய்து வருவதால் அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

வால்பாறையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை முதல் நள்ளிரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்மழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் 98.28 அடியாக உயர்ந்தது. ஓரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு, 1,269 கனஅடி நீர்வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 410 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

மழை நிலவரம்: அளவு(மி.மீ.,)சோலையாறு - 31, பரம்பிக்குளம் - 20, ஆழியாறு - 49, வால்பாறை - 78, மேல்நீராறு - 106, கீழ்நீராறு - 88, காடம்பாறை - 37, மேல்ஆழியாறு - 22, சர்க்கார்பதி - 21. வேட்டைக்காரன்புதுார் - 27, மணக்கடவு - 7, துாணக்கடவு - 16, பெருவாரிப்பள்ளம் - 18, நவமலை - 23, பொள்ளாச்சி - 58 என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...