கோவை மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிய கண்டெய்னர் லாரி - போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட வாகனங்கள்

மேம்பாலத்தில் அடியில் சிக்கிக்கொண்ட கண்டெய்னர் லாரியால் ஏற்பட்ட நெரிசலில் அந்த வழியாக நோயாளியை ஏற்றிவந்த ஆம்புலன்சும் செல்ல வழியில்லாமல் மாட்டிக்கொண்டது.


கோவை: மேம்பாலத்தில் அடியில் சிக்கிக்கொண்ட கண்டெய்னர் லாரியால் ஏற்பட்ட நெரிசலில் அந்த வழியாக நோயாளியை ஏற்றிவந்த ஆம்புலன்சும் செல்ல வழியில்லாமல் மாட்டிக்கொண்டது.

கோவை மாவட்டம் துடியலூரில் இருந்து கேரளா நோக்கி டீ தூள் ஏற்றிக்கொண்டு பெரிய கண்டைனர் லாரி ஒன்று ஆத்துப்பாலம் சந்திப்பு வழியே சென்று கொண்டிருந்தது. அந்தப்பகுதியில் நீண்ட காலமாக மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் லாரியில் இருந்த கண்டெய்னர் உயரம், கட்டப்பட்டு வரும் பாலத்தின் உயரத்தின் அளவிற்கு இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொண்டது. பல்வேறு முக்கிய சாலைகளை இணைக்கக்கூடிய சந்திப்பு ஆத்துப்பாலம் என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொள்ளாச்சி நோக்கி செல்லும் சாலையிலும், பாலக்காடு நோக்கி செல்லும் சாலையிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனை அடுத்து அங்கிருந்த பொதுமக்களே நெரிசலை கட்டுக்குள் கொண்டுவந்து, அந்த நெரிசலில் நோயாளிகளை ஏற்றுக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ்களுக்கு வழிகளை சீர் செய்து கொடுத்து ஒழுங்குபடுத்தினர்.

பின்னர் வந்த போக்குவரத்து காவல் துறையினர் நெரிசலை சீர் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பகுதி வழியே வந்ததால் வாகன நெரிசலால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். வழக்கமாகவே இப்பகுதி வழியே பள்ளி கல்லூரி வாகனங்கள் முகூர்த்த நாட்களில் அதிகளவு போக்குவரத்து இருப்பதால் மேம்பால வேலைகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...