விளையாட்டை பற்றி பேசுவதற்கு உதயநிதிக்கு அருகதை இல்லை - அண்ணாமலை ஆவேசம்

விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்று கூறுவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு எந்தவித அருகதையும் கிடையாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் பேசியுள்ளார்.


கோவை: சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதை விட திமுகவை வளர்க்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் திமுக நடத்திய மகளிர் மாநாட்டில், தனது தந்தை மற்றும் உறவினர்களை வைத்து அரசியலுக்கு வந்தவர்கள் பிரதமர் மோடி பற்றி பேசுகிறார்கள். இதுவரை 33 சதவீத இட ஒதுக்கீடு பற்றி பேசாதவர்கள் பேசுவதையெல்லாம் எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை.

சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதை விட திமுகவை வளர்க்கிறார்கள். எந்தவித பின்னணியும் இல்லாமல் தடைகளை உடைத்து அரசியலுக்கு வரும் சாதாரண பெண்மணிகளுக்காக 33 சதவிகித உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ள சூழலில் இவர்களுக்கு அதைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

திமுக கூட்டத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.கடந்த இரு தினங்களுக்கு முன்பு மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று திமுக பகுதி செயலாளர் மிரட்டல் விடுத்த நிலையில் நேற்று மகளிர் உரிமை மாநாட்டை நடத்துகின்றனர். பத்திரிகையாளர்கள் யாரையும் தான் புன்படுத்தவில்லை என்றும் போலி பத்திரிகையாளர் சங்கங்கள் பல முறை என்னை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். கடுமையாக கேள்வி கேட்கிறார்கள். எனவே அதற்கு கடுமையாக பதில் சொல்கிறேன். அவ்வளவே.

நேர்மையான பத்திரிகையாளர்களுக்கு நான் என்றும் ஆதரவாக இருப்பேன். போலி பத்திரிக்கையாளர்கள் என்னை விமர்சனம் செய்வதை நான் என்றும் கண்டுகொள்ளமாட்டேன். பாஜகவை பொருத்தவரை தமிழகத்தில் கட்சியை வலிமைப்படுத்தவே மாநிலம் முழுவதும் சட்டமன்ற தொகுதிகள் மற்றும் பாராளுமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம்.

மக்கள் வரிப்பணத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் திமுகவினர். அவர்களை எதிர்த்து ஆக்கப்பூர்வமாக தவறுகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டியது ஒரு எதிர்க்கட்சியின் கடமை என்பதால் அதைத்தான் பாஜக செய்கிறது.

பாஜக கூட்டனி குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுவதெல்லாம் அவரது சொந்த கருத்து. இன்னொரு கட்சியின் கருத்துக்கு நான் பதில் சொல்லவிரும்பவில்லை. கூட்டணி குறித்த கேள்விகளுக்கும் அவர்கள் பேசுகின்ற கருத்துகளுக்கும் தேசிய தலைமையே கருத்து சொல்லும்.

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் கண்ணியமான இருக்கையில் இருப்பதாகவும் இரண்டு முறை சட்டசபையில் பேச வானதி சீனிவாசன் முயன்றும் பேச அனுமதிப்பதில்லை என்றும் முதலில் சபாநாயகர் தன்னை சுயபரிசோதனை செய்து கொண்டு அனைவருக்கும் கட்சி பாகுபாடுன்றி சட்டபேரவையில் பேச வாய்ப்பளிக்க வேண்டும்.

சட்டப்பேரவையில் டிவி நிகழ்ச்சியின் விவாதத்தில் பேசுவது போல சபாநயகர் தனது சொந்த கருத்தையெல்லாம் பேசுகிறார். இதேபோல் நீண்டலகாலம் சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைசிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தீவிரவாதிகளுக்கு மதசாயம் பூச பாஜக விரும்பவில்லை. தீவிரவாதம் செய்ய நினைத்தவர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும். ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டார். தீவிரவாதத்திற்கு அவர் என்றும் துணை நிற்க மாட்டார் என நம்புவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...