வால்பாறையில் திமுக சார்பில் தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம்

திமுக சார்பில் வால்பாறையில் நடைபெற்ற தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் ஆலோசனை கூட்டத்தில்,வாகனம் நிறுத்தும் இடம் வழங்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


கோவை: சங்க உறுப்பினர்களுக்கு உரிய நடவடிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக சார்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுநர் முன்னேற்ற சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் அருணகிரிநாதன், செயலாளர் ராம், துணைத் தலைவர் ராஜா மற்றும் வால்பாறை lpf சங்கம் வினோத் மற்றும் சவுந்திரபண்டியன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.



வால்பாறையில் உள்ள ஆட்டோ, கார், வேன், லாரி ஓட்டுநர்கள் திமுக சார்பாக தொழிற்சங்கங்களில் இணைந்து ஓட்டுனர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நலத்திட்ட உதவிகள் வெளி மாநிலங்களில் சென்றால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் உறுப்பினர் அட்டை பெற்று அவர்களுக்கு தேவையான நல வாரியத்தின் மூலம் உதவிகளும் காப்பீடு திட்டங்களும் மருத்துவகாப்பீடு திட்டங்களும் செயல்படுத்தப்படுவோம் என்றும், வால்பாறை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, மேலும் வால்பாறையில் வாகனங்களை நிறுத்த அதற்கு இடமில்லாமல் உள்ளதால் வாகனங்கள் சாலை ஓரங்களில் நிறுத்தினால் காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

வால்பாறையில் வாகனம் நிறுத்தும் இடம் வழங்க வேண்டும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்று வைத்தனர். சங்க உறுப்பினர்களுக்கு உரிய நடவடிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர். மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வால்பாறை நகரச் செயலாளர் சுதாகர் நாலாவது வார்டு உறுப்பினர் ஜே பாஸ்கர் பாஸ்கர் எஸ் ஆர் எஸ் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...