கோவையில் டெங்கு ஒழிப்பு பணிகள் - மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

மழைக்காலம் தொடங்கயுள்ளநிலையில், கோவை மாநகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: காந்திபுரம், ராம் நகர், காட்டூர், விவேகானந்தா சாலை உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்தனர்.



கோவை மாநகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி அலுவலர்கள் டெங்கு வராமல் தற்காத்துக் கொள்ள என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என எடுத்துரைத்து வருகின்றனர். மாநகராட்சி ஆணையாளரும் அப்போது பல்வேறு இடங்களில் இது குறித்த ஆய்வுகளை நேரடியாக சென்று மேற்கொண்டு வருகிறார். மாநகரில் பல்வேறு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் இன்று கோவை மாநகராட்சி பகுதிகளான காந்திபுரம், ராம் நகர், காட்டூர், விவேகானந்தா சாலை உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்தனர்.



அப்போது அப்பகுதியில் பல்வேறு தெருக்களுக்குச் சென்ற அவர்கள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகள், ட்ரம் ஆகியவற்றை ஆய்வு செய்து அங்குள்ள பொதுமக்களிடம் எவ்வாறு டெங்குவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து எடுத்துரைத்தனர். மேலும் தேவையற்ற பொருட்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது எனவும், தண்ணீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்கள் மற்றும் ட்ரம் உள்ளிட்டவற்றை முறையாக மூடி வைத்திருக்க வேண்டும் எனவும் புழுக்கள் சேராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் மாநகராட்சி பணியாளர்கள் ஆய்விற்கு வரும்பொழுது அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து பணியாளர்களிடம் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கேட்டு அறிந்து அதற்கான பதிவேடுகளையும் ஆய்வு செய்தனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...