உடுமலையில் வானவியல் சார் பயிற்சி பட்டறை - சூரிய குடும்பம் பற்றி மாணவர்களுக்கு விளக்கம்

உடுமலையில் நடைபெற்ற வானவியல் சார் பயிற்சி பட்டறையில், சூரிய குடும்பம், கோள்கள், சூரியனை சுற்றி வரும் விதம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.


திருப்பூர்: வானவியல் சார் பயிற்சி பட்டறையில். சர்வதேச விண்வெளி வார விழா பற்றியும், வன உயிரின வார விழா பற்றியும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.

உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் ,உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் சார்பில் சர்வதேச விண்வெளி வார விழா அக்டோபர் 4 முதல் 10 வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் அடிப்படையில் அக்டோபர் 7 அன்று அந்தியூர் கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான வானவியல் சார் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் சூரிய குடும்பம், கோள்கள், சூரியனை சுற்றி வரும் விதம், நிலவின் முகங்கள், நட்சத்திர தொகுதிகளை எளிதில் அடையாளம் காணுதல், சூரிய கடிகாரம், பந்து கண்ணாடி மாயக்கண்ணாடி, ஓரிடத்தில் உள்ளூர் நண்பகல் நேரத்தை கணக்கிடுதல், சரியான திசைகளை சூரியனின் நிழலை வைத்து கணக்கிடுதல் என்பது போன்ற பல்வேறு வானவியல் சார் கருத்துக்களை எளிமையாக தெரிந்து கொள்வதற்கான எளிய பொருட்களைக் கொண்டு அறிவியல் சார் கருவிகளை மாணவர்கள் தாங்களாகவே செய்ய வழி காட்டப்பட்டது.



அது சார்ந்த வானவியல் சார் கருத்துக்களை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், ஜிவிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியும் கருத்தாளருமான ஹரிணி ஆகியோர் விளக்கிக் கூறினர். கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை வகித்தார். உடுமலை உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சர்வதேச விண்வெளி வார விழா பற்றியும், வன உயிரின வார விழா பற்றியும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் எடுத்துக் கூறினார்.

குறிப்பாக ஆனைமலை புலிகள் காப்பகத்தை பாதுகாக்க வேண்டியது நமது முக்கிய கடமை என்பதையும் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார். நிறைவாக கல்லூரி அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கீதாமணி நன்றி கூறினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...