குண்டடம் அருகே கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவரிடம் கிராம மக்கள் மனு

குண்டடம் அருகே வெருவேடம்பாளையத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முக்கிய துறைகளின் அலுவலர்கள் யாரும் பங்கேற்காததால் கிராமசபை கூட்டத்தை ரத்து செய்துவிட்டு வேறு தேதியில் அனைத்து துறை அலுவலரகளையும் அழைத்து கூட்டத்தை நடத்த வேண்டும் என மக்கள் மனு அளித்தனர்.


திருப்பூர்: கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய 19 துறைகளில், 15 துறைகளின் அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் மற்ற துறையினரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குண்டடம் அருகே நந்தவனம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெருவேடம்பாளையத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் தனசெல்வி தலைமை தாங்கினார். இதில் கூடுதல் வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

கிராமசபை கூட்டத்தில் கால்நடை பராரிப்பு, உள்ளாட்சி, சுகாதாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மட்டும் பங்கேற்று அவர்களின் துறை சார்ந்து பேசினர். கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய 19 துறைகளில் ஏனைய 15 துறைகளின் அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் மற்ற துறையினரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக பொதுமக்கள் பெரும்பாலான அலுவலர்கள் கலந்து கொள்ளாததால் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஊராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-கிராமசபை கூட்டத்தில் முக்கிய துறைகளின் அலுவலர்கள் யாரும் பங்கேற்காததால் கிராமசபை கூட்டத்தை ரத்து செய்துவிட்டு வேறு தேதியில் அனைத்து துறை அலுவலரகளையும் அழைத்து கூட்டத்தை நடத்த வேண்டுகிறோம் என குறிப்பிட்டிருந்தனர்.

அந்த மனுவை பஞ்சாயத்து தலைவர் பெற்றுக் கொண்ட நிலையில் அதற்கு பதிலளித்த அதிகாரி இந்த கருத்தை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அடுத்த முறை அனைத்து துறை அலுவலர்களையும் பங்கேற்க ஏற்பாடு செய்கிறோம் என்றார்.

அதனைக் கேட்ட பொதுமக்கள் கடந்த 3 கிராமசபை கூட்டங்களிலும் இந்த விசயத்தை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் கூட்டம் முடிந்ததும் அதை மறந்துவிடுகின்றனர். அதனால் இந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதுபற்றி கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். கூட்டத்தை ரத்து செய்ய முடியாது என மீண்டும் அதிகாரி கூறினார்.இதனால் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...