செம்மிபாளையத்தில் கிராம சபை கூட்டம் - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

பல்லடம் அருகே செம்மிபாளையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்தும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செம்மிபாளையம் ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், சார்ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார், திட்ட இயக்குனர் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



இந்த கிராம சபை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்தும், தூய்மை பாரத இயக்கத்தை முன்னெடுப்பது குறித்தும், காசநோய் இல்லாத கிராமமாக அறிவிப்பது குறித்தும், ஊராட்சியின் வரவு செலவு ஆவணங்களை சரி பார்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மகளிர் சுய உதவி குழுவினருக்கும்,உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கும், கடன் உதவி தொகை வழங்கினார்.



மேலும் முதியவர்களுக்கு கண் கண்ணாடி மற்றும் ஓய்வு பெற்ற அஞ்சல் துறை அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...