வெள்ளலூர் பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் - கோவை மாவட்ட ஆட்சியரிடம் மீட்பு குழு மனு

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவக்கி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மீட்பு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: பேருந்து நிலைய பணிகள் முழுமையாக முடிந்தால், அனைத்து பிரதான சாலைகளுக்கும் அண்டை மாநிலங்களில் சென்று வர போக்குவரத்து மிகவும் எளிதாக இருக்கும் என வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.



வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவக்கி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மீட்பு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்பது கோவை மக்களின் நீண்ட கனவு. அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக செல்லும் பயணிகளின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் துவங்கி சுமார் 40 கோடி மதிப்பீட்டில் 65 சதவிகிதப் பணிகள் முடிந்துள்ளது.



இந்த நிலையில் முற்றிலுமாக அப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு உள்ள அவர்கள், இந்த பேருந்து நிலையம் அமைந்தால் அனைத்து பிரதான சாலைகளுக்கும் அண்டை மாநிலங்களில் சென்று வர போக்குவரத்து மிகவும் எளிதாக இருக்கும் என குறிபிட்டுள்ளனர்.

மேலும் நீலாம்பூர் செட்டிபாளையம் என வேறு பகுதிகளுக்கு பேருந்து நிலையம் கட்டும் திட்டத்தை மாற்றினால் அது கூடுதல் செலவு மற்றும் காலதாமதம் ஆகும். எனவே நிறுத்தப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகளை முற்றிலுமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.



இது குறித்து அவர்கள் கூறுகையில் இப்பணிகள் இதுவரை நடைபெற்றது. எல்லாம் மக்கள் வரிப்பணம் தான். தற்பொழுது இப்பணிகள் முற்றிலுமாக நிறுத்தும் பட்சத்தில் மக்கள் வரிப்பணம் வீணாக கூடும். பாதி பணிகளில் நிறுத்தப்பட்ட அந்த வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்குள் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களை சிலர் அரங்கேற்றி வருவதாக மீட்பு குழுவினர் புகார் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...