பாஜக உடனான கூட்டணி குறித்து எடப்பாடி முடிவு செய்வார் - பல்லடத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் பதில்

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்தும், போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்தக்கோரியும் திருப்பூர்-பல்லடம் சாலையில் வீரபாண்டி பிரிவில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பாஜகவுடன் கூட்டணி குறித்து கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை எனவும் போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்தவில்லை எனவும் குற்ற செயல்களில் ஈடுபடுபவரை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாகவும் கண்டனம் தெரிவித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக அறிவிப்பின்படி இன்று திருப்பூர் பல்லடம் சாலையில் வீரபாண்டி பிரிவில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் பல்லடம் எம்எல்ஏ எம் எஸ் எம் ஆனந்தன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கடந்த மூன்றாம் தேதி பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் தனது வீட்டின் அருகே அமர்ந்து மது அருந்திய ரவுடிகளை தட்டிக் கேட்ட காரணத்திற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் கோவையில் நீதிமன்ற வளாகத்திலேயே நடந்த கூலிப்படை கொலைகள் மற்றும் சென்னிமலை பகுதியில் வயதான தம்பதிகள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகிய அனைத்திற்கும் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்தது தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.



இது போன்ற தொடர் நிகழ்வுகளை உளவுத்துறை மற்றும் காவல் துறையினர் கண்காணிக்காமல் விட்டதாகவும் திருப்பூர் மாவட்டத்தில் அரசு நடத்தும் மதுபான கடைகளில் முறைகேடுகள் தொடர்வதாகவும் அரசின் அனுமதி இல்லாமல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பார்கள் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அதிமுகவினர் புகார் தெரிவித்தனர்.

சமூகவிரோதிகளின் கூடாரமாக திருப்பூர் மாவட்டம் மாறி வருவதாகவும் அவர்கள் கூறினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு கொங்கு மண்டல பகுதிகளில் கொலை மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

போதைப்பொருள் விற்பனையால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கிறது. திமுக தலைமையிலான அரசு இதை கட்டுப்படுத்த தவறிவிட்டது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் திமுகவை வீட்டுக்கு அனுப்புவார்கள். பாஜக உடனான கூட்டணி குறித்து செய்தார்கள் எழுப்பிய கேள்விக்கு நான் ஒரு மாவட்ட செயலாளர் இதுகுறித்து எங்களின் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...