தேர்தலுக்கு தயாராகும் அதிமுக நிர்வாகிகள் - பல்லடம் சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரம்

திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முதலிபாளையம் ஊராட்சியில் அதிமுக சார்பில் இன்று அனைத்து கிளைகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: முன்னாள் எம்எல்ஏ மற்றும் பல்லடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கரைப்புதூர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற பத் கமிட்டி ஆலோசனைக்கூட்டத்தில் முதலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கழக இணை செயலாளர் மயூரி பிரியா நடராஜன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டர்.



2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முதலிபாளையம் ஊராட்சியில் இன்று அனைத்து கிளைகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



முன்னாள் எம்எல்ஏ மற்றும் பல்லடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கரைப்புதூர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கழக இணை செயலாளர் மயூரி பிரியா நடராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், ஒன்றிய கழக அவைத் தலைவர் இடுவாய் சென்னியப்பன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மங்கலம் முருகசாமி, ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வைஸ் முத்துக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் கல்பனா வேலுச்சாமி மற்றும் கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில் பூத் வாரியாக இளைஞர் அணி மற்றும் இளம் பெண்கள் அணி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பது குறித்து முன்னாள் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தார்.

அதனைத்தொடர்ந்து அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும் பூத் கமிட்டி உறுப்பினர் கையேடு வழங்கப்பட்டது.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...