கோயம்புத்தூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மேயர் கல்பனாவிடம் 42 மனுக்கள் அளிப்பு..!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்களிடம்‌ 42 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.


கோவை: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்பொதுமக்கள்‌ அளித்த கோரிக்கை மனுக்களின்‌ மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அலுவலா்களுக்கு மேயா்‌கல்பனா ஆனந்தகுமார்‌ உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமாரிடம்‌ 42 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ இன்று (05.09.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்கள்‌ க.சிவகுமார்‌, மரு.ச.செல்வசுரபி ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில்‌ மேயரிடம்‌ மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளைச்‌ சோந்த பொதுமக்கள்‌ 42 நபர்கள்‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌. இதில்‌ பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர்‌ இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்கள்‌ பெறப்பட்டன.



இவற்றில்‌ கிழக்கு மண்டலத்தில்‌ 7 மனுக்களும்‌, மேற்கு மண்டலத்தில்‌ 6 மனுக்களும்‌, வடக்கு மண்டலத்தில்‌ 9 மனுக்களும்‌, தெற்கு மண்டலத்தில்‌ 4 மனுக்களும்‌, மத்திய மண்டலத்தில்‌ 11 மனுக்களும்‌, பிரதான அலுவலகத்தில்‌ 5 மனுக்களும்‌ ஆகமொத்தம்‌ 42 மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.

இக்கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, இம்மனுக்களின்‌ மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில்‌, உதவி ஆணையர்‌ (வருவாய்‌) செந்தில்குமார்‌ இரத்தினம்‌, உதவி ஆணையர்‌ (கணக்கு) சுந்தர்ராஜ், உதவி ஆணையர்‌ (நிர்வாகம்‌) செந்தில்‌, மண்டல உதவி ஆணையார்கள்‌ செந்தில்குமரன்‌, மகேஷ்கனகராஜ்‌, அண்ணாதுரை, சந்தியா, நூார்‌அகமதுபொ)), நகர்‌ நல அலுவலர்‌ மரு.தாமோதரன்‌, செயற்பொறியாளார்கள்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌, உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌, உதவி பொறியாளர்கள்‌, மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...