மாநகராட்சியின் பல்வேறு பணிகள் குறித்து 42-வது வார்டில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 42-வது வார்டுக்குட்பட்ட உடையாம்பாளையம் பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் வீடுகளுக்குச் செல்லும் துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதையும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதையும் ஆய்வு செய்தார்.



பின், அந்த வார்டுக்குட்பட்ட திருமலை நகர் பகுதிக்குச் சென்ற மாநகராட்சி ஆணையர் அங்கு செயல்பட்டு வரும் ஒரு கடையில் 50 மைக்ரான் குறைவாக உள்ள பாலீத்தீன் பைகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரிடம் பாலித்தீன் பைகளின் பயன்பாட்டை தவிர்த்து துணிகளால் ஆன பைகள், அல்லது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகளை உபயோகிக்குமாறு அறிவுரை வழங்கினார்.



இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவையும், உடையாம்பாளையத்தில் உள்ள நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் திருமலை நகரில் உள்ள உள்விளையாட்டரங்கம் சீரமைப்பு பணிகளை அய்வு செய்தார்.



இந்த அய்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உடன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணன், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...