கோவையில் மினி பஸ் சேவையை மீட்டெடுக்க வேண்டும் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இருந்த நிலையில் 20க்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்படுவது மிகவும் வருத்தத்தை அளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: மகாராட்டிரா மாநில விவசாயிகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வது, தீக்குளிப்பது போன்றவற்றை கையில் எடுக்காமல் நெஞ்சு நிமிர்த்தி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி கூறினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி, அவரது அலுவலகத்தில் என்ற செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,



தமிழ்நாட்டில் நீண்ட காலமாக இயங்கி வந்த மினி பஸ் சேவை அன்றைய முதல்வர் கலைஞரால் துவங்கப்பட்டது. இந்த பேருந்துகள் தமிழகத்தின் அனைத்து கிராமப்புறங்களிலும் சென்று விவசாயிகள், கிராமப்புற ஏழை மக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

6000 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 800க்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிகிறது. கோவை மாவட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இருந்த நிலையில் 20க்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. ஆட்சிகளும் காட்சிகளும் மாறினாலும் நலத்திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

கிராமப்புறங்களில் பல்வேறு பகுதிகளில் ஓடாமல் மினி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு புதர் மண்டி கிடைக்கிறது என்பதை கண்கூடாக பார்த்தோம். டீசல் விலை உயர்வு, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கிடைப்பது சிரமமாக இருப்பதால் பேருந்துகளை இயக்குவது இல்லை என்று மினி பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

திமுக தேர்தல் அறிக்கையில் தேர்தலில் வெற்றி பெற்று வந்தால் இந்த பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம் என்று கூறினார்கள். இது நாள் வரையிலும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கிராமப்புறத்தில் உள்ள விவசாய பெருமக்களுக்கு மிகவும் உதவியாக இருந்த இந்த பேருந்துகளை மீண்டும் இயக்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கேஸ் விலை குறைத்ததை கூட தேர்தலுக்காக தான் என்று நாங்கள் கருதுகிறோம். தேர்தலுக்காக இதனை அறிவித்து விட்டு தேர்தலுக்கு பின் விலையை ஏற்றினால் அது வருத்தத்திற்குரிய விஷயமாக அமையும். கோவையில் சூலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மினி பேருந்துகளை இயக்க வேண்டும்.

மகாராட்டிரா மாநில விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய அவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வது, தீக்குளிப்பது போன்றவற்றை விவசாயிகள் கையில் எடுக்காமல் வேறு விதத்தில் போராட்டத்தை நெஞ்சு நிமிர்த்தி நடத்த வேண்டும். மாடியில் இருந்து குதிப்பது போன்றவை எல்லாம் விவசாயிகள் கோபத்தை காட்டுகிறார்களே தவிர அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து தீர்வு காண வேண்டும் என்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதை விவசாயிகள் இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...