மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு சென்ற இளைஞர் உயிரிழப்பு - சிறுத்தை தாக்கியிருக்கலாம் என தகவல்!

கோவை தடாகம் அருகேயுள்ள மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு சென்ற செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுகசூரியா என்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது கைகள் மற்றும் கழுத்து பகுதியில் சிறுத்தை தாக்கிய தடம் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தடாகம் அருகே மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மேல்முடி ரங்கநாதர் கோவில் உள்ளது. இது ஒரு மலைக்கோவில் ஆகும். இங்கு சாலை வசதியோ படிக்கட்டுகளோ இல்லாததால், மலைப்பாதை வழியாக மட்டுமே ஏறி செல்ல முடியும்.

வழக்கமாக விசேஷ நாட்களில் அதிகமான பக்தர்கள் செல்வது வழக்கம். மற்றபடி இக்கோவிலுக்கு ஒரு சிலர் மட்டுமே சென்று வருவர்.

இந்நிலையில் நேற்று மாலை மேல்முடி தண்ணீர் பாறை பகுதியில் வன களப்பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சடலத்தின் கை மற்றும் கழுத்துப் பகுதிகளில் சிறுத்தை தாக்கியது போல் காயங்கள் இருந்துள்ளது.

இதனை அடுத்து தடாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில் உயிரிழந்த நபர் கோவை பேரூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுகசூர்யா (24) என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சுகசூரியா அடிக்கடி சிவன் கோவிலுக்கும் மலை கோவில்களுக்கும் தனியாகச் சென்று வருவார் என்றும் அவ்வாறு கோவில்களுக்குச் சென்றால் இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான் வருவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி கோவிலுக்கு சென்று விட்டு வருகிறேன் என்று கிளம்பிய சுகசூரியா வீடு திரும்பாத நிலையில் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் காட்டு மாடு ஒன்றை சிறுத்தை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...