அரசு பள்ளி கழிவறையில் மாணவி மீது பாய்ந்த மின்சாரம் - காது கேட்கும் திறன் பாதிப்பு

திருப்பூரில் அரசுப்பள்ளியின் கழிவறைக்கு சென்றபோது மாணவி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டதில் மாணவிக்கு எலும்புகள் முறிந்து, காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: அரசுப்பள்ளியின் அலட்சியமே தனது மகள் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என மின்சாரம் பாய்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். தனது மகளின் மருத்துவ சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுகொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துக்குட்டி கிராமத்தை சேர்ந்த டேவிட்ராஜ் - ஜெனிபரின் மகள் ஜோஸ்லின் ஜெனியா. இவர் திருப்பூர் செரங்காடு பகுதியில் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

திருப்பூர் செரங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு பயின்று வருகிறார். ஜோஸ்லின் ஜெனியா என்ற மாணவி கடந்த 5 ஆம் தேதி பள்ளிக்கு சென்றார். அங்கு கழிவறைக்கு சென்ற போது கழிப்பறையின் கூரையில் இருந்து அறுந்து தொங்கிய வயரில் இருந்து மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோஸ்லின் ஜெனியா படுகாயமடைந்தார்.



திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு முழங்கை எலும்பு மற்றும் தோள்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டது. கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 நாட்கள் சிகிச்சைக்கு பிறகும் சரியாக காது கேட்காததால், ஜோஸ்லின் ஜெனியாவின் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு சென்று காண்பித்தனர். இதில் அவரது காதுகள் பாதிக்கப்பட்டு விட்டதால், 90 சதவீத கேட்கும் திறன் இழந்து விட்டதாக கூறி உள்ளனர்.

இந்த நிலையில், சிறுமி ஜோஸ்லின் ஜெனியா அரசு பள்ளியின் அஜாக்கிரதை காரணமாக மின்சாரம் தாக்கி அடிபட்ட நிலையில், அரசோ, பள்ளி நிர்வாகமோ உதவ முன்வரவில்லை எனவும், தனது மகளின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் எனவும் அவரது தாய் ஜெனிபர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஜெனிபர் கூறுகையில், ‘ திருப்பூர் செரங்காட்டில் வசிக்கும் நான் கூலி வேலை செய்து வருகிறேன். மகள் ஜோஸ்லின் ஜெனியா மாநகராட்சிப் பள்ளியில் படித்து வந்த நிலையில், 20 நாட்களுக்கு முன்னர் பள்ளியில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.

இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் அஜாக்கிரதையாக இருந்து விட்டு, எனது மகளை குறை சொல்கிறார்கள். எனது மகள் ஜோஸ்லின் ஜெனியாவுக்கு முழங்கை, தோள்பட்டை எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் கழுத்திலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. காதுகள் 90 சதவீதம் கேட்கும் திறனை இழந்து விட்டது. நான் கூலி வேலை செய்து வருகிறேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு செலவு செய்யுமளவுக்கு வசதி இல்லை. தமிழ்நாடு அரசு எனது மகளின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார்.

Newsletter

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...