பல்லடம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு!

பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள அடாவடியாக செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறையினரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள அடாவடிக்கு பெயர்போன ஆக்கிரமிப்பு டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை சந்தித்து பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகே கொச்சின் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 1830 டாஸ்மாக் மதுக்கடை. அடாவடிக்கு பெயர்போன இந்த டாஸ்மாக் கடையினால் பொதுமக்கள், பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், மதுப்பிரியர்கள் போதையில் சாலையிலேயே அலங்காலமாக படுத்துக் கிடப்பதோடு சாலையில் செல்வோரிடம் அடாவடி செயலில் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இதனை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதனிடையே அடாவடிக்கு பெயர்போன டாஸ்மாக் கடை எண் 1830 நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இதனால் சாலையின் குறுக்கே வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், உடனடியாக நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...