சட்டவிரோத செயல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் - மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி தகவல்!

கோவையின் மேற்கு மண்டல காவல்துறை தலைவராக புதிதாக பொறுப்பெற்றுள்ள பவானீஸ்வரி, சட்டவிரோத செயல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க எல்லைகள் வலுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.



கோவை: சட்டவிரோத செயல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி தெரிவித்துள்ளார்.



கோவை மேற்கு மண்டலத்திற்கான புதிய காவல்துறை தலைவராக பொறுப்பேற்று கொண்ட ஐஜி பவானீஸ்வரி கோவை பந்தய சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



மேற்கு மண்டலத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நல்ல முறையில் சிறப்பாக பணி செய்து வருகிறார்கள். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் குற்றத்தை எப்படி தடுக்கலாம் என விழிப்புணர்வு செய்து வருகிறார்கள்.

அதே போல போதை பொருள் புழக்கம் என்பது கண்டிப்பாக பெரிய குற்றம் என்பதால் நிச்சயமாக கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதனை சிறப்பாக செய்ய உள்ளோம். சட்டவிரோத செயல்கள் நடைபெற்றால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டத்திற்கு புறம்பாக எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக எது நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

போதை பொருள் புழக்கத்தை எப்படி ஒழிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வருகிற 11ஆம் தேதி ஆன்டி ட்ரக் நாள் (Anti Drug Day) சம்பந்தமாக அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

அதிகாரிகளிடம் கலந்து பேசி போதைப்பொருள் எந்த வழிகளில் வருகிறதோ அதனை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொள்ள உள்ளேன் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

எல்லை பகுதிகளில் இருந்து எப்படி போதை பொருள் உள்ளே வருகின்றது என்பது குறித்து ஆய்வு செய்து அதனை தடுக்க இன்னமும் எப்படி வலுப்படுத்த முடியுமோ அதனை செய்ய உள்ளோம்.

வட மாநில தொழிலாளர்கள் தென் மாநில தொழிலாளர்கள் என பாகுபாடு பார்க்காமல் யார் குற்றம் செய்தாலும் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். மேற்கு மண்டலம் அன்பான மக்கள் அவர்களுக்கு அமைதியான முறையில் நல்ல வாழ்க்கை கொடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.

பொதுமக்களுக்கு மனுநீதி நாள் போன்றவை நடத்தப்பட்டு அதில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது அவர்களுக்கு என்ன தேவையோ சட்ட ரீதியாக உறுதியாக செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...