கொடநாடு வழக்கை துரிதமாக விசாரிக்க வேண்டும் - அமமுக, ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டம்!

கோவை செஞ்சிலுவை சங்கம் அருகேயுள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அமமுக -அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை துரிதமாக நடத்த வலியுறுத்தி இரு அமைப்புகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை துரிதமாக நடத்த வலியுறுத்தி அமமுக -அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கோவையில் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை செஞ்சிலுவை சங்கம் அருகேயுள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அமமுக -அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை துரிதமாக நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இரு அமைப்புகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், கொடநாடு உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என உடலில் கருப்பு சாயம் பூசி, அதில் வெள்ளை எழுத்துகளில் எழுதி வந்தனர்.



அப்போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அமர வைத்தனர்.



ஆர்ப்பாட்டத்தின் போது கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பபட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் அழகு மருதுராஜ் பேசியதாவது,



திமுக தலைவர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சொன்னார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 90 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். வாயால் மட்டும் சொல்லவில்லை, திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் சொல்லப்பட்டது.

ஆனால் இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது, விசாரணை மாறுகின்றதே தவிர விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தனியார் தொலைக்காட்சி கொடநாடு வழக்கு குறித்து புலனாய்வு செய்தியை ஒளிபரப்பியது. அதில் குற்றவாளிகளை கேரளாவில் சந்தித்த போது எங்களை சந்தித்து ஒரு நபர் பேரம் பேசினார், காரிலே வந்து பணம் தந்தார் என்று அவர்கள் சொன்னார்கள்.

பல புகைப்படங்களை காட்டிய பொழுதும் மறுத்த அவர்கள், சேலம் இளங்கோவின் புகைப்படத்தை காட்டிய பொழுது அவர் தான் தங்களை சந்தித்தாக குற்றவாளிகள் சொன்னார்கள். அப்படிச் சொல்லப்பட்ட 20 நாட்களில் சேலம் இளங்கோவனுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் பதவி, எடப்பாடி வகித்து வந்த அந்த பதவி கொடுக்கப்பட்டது.

இதே போல சஜீவன் என்பவருக்கு அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இவை அனைத்தையும் ஒன்றாக , எல்லா பக்கமும் பார்த்தால் சந்தேகம் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி வருகிறது.

கொடநாடு குறித்து தேர்தல் வாக்குறுதி கொடுத்து 2.5 வருடங்கள் ஆகிவிட்டது, ஏன் இது வரை குற்றவாளிகளை தண்டிக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி ஒரு முறை கூட தன் வாயை திறந்து இது வரை திமுக அரசை கேட்கவில்லை எனவும்,அதிமுக சார்பில் 14 முறை திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

ஆனால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்கவேண்டும் என ஏன் அதிமுக கேட்கவில்லை. எடப்பாடியுடன் இருப்பவர்கள் கொடநாடு என்ற பெயரை சொல்வது இல்லை. நாங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் தமிழக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.

அதிமுக கைது செய்தவர்களை திமுக பிணையில் எடுக்கின்றது. மொத்த விபரங்களையும் திமுக தெரிந்துகொண்டு, எடப்பாடியை பிணைகைதியாக, அரசியல் ரீதியாக வைத்துக்கொண்டு உள்ளடி வேலை பார்க்கின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் காவல் நிலையத்தில் அமர வைக்கப்பட்ட கருப்பு பெயிண்ட் அடித்து வந்த நான்கு பேரையும் போலீசார் விடுவித்தனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...