தாராபுரம் அருகே ரூ.3 கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைத்த அமைச்சர்கள்!

தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நல திட்ட பணிகளை தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே ரூ.3 கோடி மதிப்பிலான திட்டங்களை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தனர்.

தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.



அதன்படி, மண் சாலையை தார் சாலையாக அமைத்தல், மாநில நிதி ஆணையம் நகர்புற சாலைகள் மேம்பாட்டு நிதியின் கீழ் வெள்ளகோவில் சாலையில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக செல்லும் பழுதடைந்து உள்ள தார் சாலையை 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பலப்படுத்துதல், நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வெள்ளக்கோவில் வழியாக எரச்சப்பாடி செல்லும் பழுதடைந்த தார் சாலையை 43.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலையை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.



மேலும் தமிழ் நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பதிவு செய்து வரும் முகாம்களை ஆய்வு செய்தனர்.



இந்நிகழ்சியில், திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் ஜெகஜோதி, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், மூலனூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி, கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் சுரேஷ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Newsletter

சரவணம்பட்டியில் லாரி டிரைவர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை

கோவை சரவணம்பட்டி விநாயகாபுரம் இளங்கோ பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியில் டிரைவர் ராஜு (53) மர்மமான முறையில் உய...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...