கோவையில் வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் மோசடி செய்த நபர் கைது

கோவை சாய்பாபா காலனியில் மெரிட் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் வீடு கட்டி தருவதாக கூறி 18 பேரிடம் சுமார் 78 லட்சம் ரூபாய் மோசடி செய்த விஜயகுமார் என்ற நபரை கைது செய்துள்ள போலீசார், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருகின்றனர்.



கோவை: கோவையில் வீடு கட்டி தருவதாக கூறி 78 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் மெரிட் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் விஜயகுமார். இவரும், அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ஜோயல் எமர்சன் இணைந்து, இந்த நிறுவனத்தின் மூலம் கோவை பெரியநாயக்கன்பாளையம், அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடு மனை இடம் விற்பனைக்கு இருப்பதாகவும் அதில் வீடு கட்டி விற்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டனர்.

இதனை நம்பி கடந்த 2019 ஆம் ஆண்டில் வீட்டுமனை மற்றும் வீடு வாங்குவதற்காக பணத்தை பொதுமக்கள் கொடுத்துள்ளனர். அதில் வீட்டுமனையை கிரையம் செய்ய 10 சதவீத தொகை அட்வான்ஸ் முதலில் தர வேண்டும் எனவும் கிரயத்தின் போது மீதமுள்ள பணத்தை தர வேண்டும் என்ற நிபந்தையுடன் ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர்.

இதில் 26 பேரிடம் கிட்டத்தட்ட 90 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெற்று கொண்ட விஜயகுமார், பணத்தை கொடுத்தவர்கள் நான்கு முறை பத்திரப்பதிவுக்கு சென்றபோது இடத்தின் உரிமையாளர் வரவில்லை, பங்குதாரர் வரவில்லை என காரணம் கூறி காலத்தை கடத்தி வந்துள்ளார்.

மேலும் பலரிடம் முழுதொகையையும் பெற்றுக்கொண்டு வீட்டை பாதி வரை கட்டி, மீதமுள்ள பணிகளை கிடப்பில் போட்டதாக பாதிக்கப்பட்டவர்கள், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் விஜயகுமாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். 26 பேரில் சிலருக்கு பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 16 பேரிடம் 78 லட்சம் ரூபாய் மோசடி செய்த்தாக, விஜயகுமார் மற்றும் ஜோயல் எமர்சன், திருச்சியை சேர்ந்த கிளமெண்ட் பெர்னா போஸ் ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள கோவை மாநகர குற்றபிரிவு போலீசார் விஜயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...