பாஜக வாஷிங் மெஷின் தான், எங்களிடம் வருபவர்களை தூய்மையாக மாற்றி விடுவோம் - வானதி சீனிவாசன் கருத்து!

சுந்தராபுரம் பகுதியில் பேசிய கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், பாஜகவை வாஷிங் மெஷின் என்று கூறினார்கள். ஆம் பாஜக என்பது வாஷிங் மெஷின் தான், எங்களிடம் வருபவர்களை தூய்மையாக்கி விடுவோம் என்று கூறினார்.



கோவை: பாஜக என்பது வாஷிங் மெஷின் தான், எங்களிடம் வருபவர்களை தூய்மையாக்கி விடுவோம் என கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



பாஜக மகளிரணி சார்பில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுதானிய ஆண்டை கொண்டாடும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சிறுதானிய பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தி கொண்டிருக்கிறது.

கர்நாடகா சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சிக்கு இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பிரதமர் மோடி எதிர்ப்பை மட்டும் கவனத்தில் கொண்டு, சுயநல அரசியலுக்காக விவசாயிகள் நலனை, மாநிலத்தை உரிமையை முதல்வர் காவு கொடுக்கிறார்.

காவிரி நதி நீர் பிரச்சனை உயிர் நாடி பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனையில் தமிழக உரிமை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு நடுநிலை வகித்த காரணத்தினால் தான் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.

ஆண்டுதோறும் காலதாமதம் இல்லாமல் மேட்டூர் அணை திறக்க பெருமை பாஜக, மோடியையே சாரும்.இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளில் பொதுவான நியாயமான வழியில் பாஜக நிற்கிறது.

மேகதாது அணை கட்ட வேண்டுமென கர்நாடகா பாஜக அரசு சொன்ன போது கூட, நடுவர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டுமென மத்திய பாஜக அரசு தமிழக விவசாயிகள் நியாயத்தின் பக்கம் நின்றது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது.

கருணாநிதி காலத்தில் காவிரி பிரச்சினையில் தமிழக உரிமையை விட்டு கொடுத்தீர்கள். அதனால் புதிய அணைகள் வந்ததால்தான் பிரச்சனைகள் வந்தது. அப்பிரச்சனைகளுக்கு தீர்வை தந்தவர் பிரதமர் மோடி. மக்கள் நலனை விட, காவிரி நீராதார உரிமை தாண்டி. விவசாயிகள் நலன் தாண்டி, மாநிலத்தின் உரிமையை விட மோடி எதிர்ப்பு அரசியல் தான் முதல்வருக்கு முக்கியமாக உள்ளது.

திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எந்த காலத்தில் நடந்தது? நீதிமன்ற உத்தரவினால் துறைகள் நடவடிக்கை எடுத்தால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதா? இது தான் சட்டத்திற்கு கொடுக்கும் மரியாதையா? விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு தனமாக பேசுகிறார்.

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திராவிட மாடல் ஆட்சியில் காலையில் குடிப்பவர்கள் குடிகாரர்கள் என அழைக்கப்பட மாட்டார்கள். திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை புதிதாக கற்பனையாக யாரும் சொல்லவில்லை.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களை நியமிக்கும் போது, அவர்களின் குற்றப்பின்னணி, வழக்குகள் இருப்பதைப் பார்த்து சரியான பின்னணி கொண்டவர்களை நியமிக்க வேண்டும்.

பாஜகவை வாசிங் மெசின் என்றார்கள். இப்போது பாஜகவை கங்கை நதி என்கிறார்கள். கங்கை நதி புனிதம் என்பதை ஏற்றுக்கொண்டதில் சந்தோசம் அடைகிறேன். அவர்களுக்கு எதுவும் புனிதம் கிடையாது. பாஜகவை வாசிங் மெசின் என்றால், வாசிங் மெசின் தான். எங்களிடம் வந்தால் அவர்களை தூய்மையாக மாற்றி விடுவோம்.

கங்கை நதி என்றால், கங்கை நதிதான். எங்களிடம் வந்ததால் எல்லாத்தையும் புனிதமாக மாற்றும் சக்தி எங்களிடம் உள்ளது. ஏனெனில் கட்சி நேர்மை, அறம், சட்டம் அடிப்படையில் செய்கிறது. எங்களிடம் யார் வந்தாலும் நல்லவர்களாக மாறி விடுவார்கள்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதை திரித்து போட்டு விட்டார்கள். தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு எடுக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் புதிதாக நடக்கவில்லை. வழக்கமாக நடக்கும் ஒன்று தான். பாமக கூட்டணியில் இருக்கிறார்களா என்பது அந்த கூட்டத்தில் தெரியும்.

எதிர்கட்சி எம்.எல்.ஏ.விடம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென மக்கள் நீதி மய்யத்தினர் கேட்கின்றனர். சட்டமன்ற உறுப்பினராக என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்து கொண்டுள்ளேன். நான் களத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் கமல்ஹாசன் நான்கைந்து முறை கூட கோவைக்கு வரவில்லை. 

மக்கள் நீதி மய்யத்திற்கு அரசியல் வாழ்க்கை தேவை என்பதால், கோவை தெற்கு தொகுதி தான் கண்ணில் தெரிகிறது. கமல்ஹாசன் ஒரு பொண்ணுக்கு கார் வாங்கி தந்தார். அதை கோவைக்கு வந்து கொடுக்க கூட அவருக்கு நேரமில்லை. நான் 1000 பெண்களுக்கு தையல் இயந்திரம் வாங்கி தந்து தொழில் முனைவோராக மாற்றியுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...