எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் - திருப்பூரில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு!

பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க பெங்களூருவுக்கு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருப்பூரில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து கோஷங்களை எழுப்பினர்.



திருப்பூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூர் சென்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காவிரி பிரச்சனையில் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.



மேலும், பெங்களூரு சென்றுள்ள தமிழக முதல்வர் இப்பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பாமல் கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் அரசோடு இணக்கமாக செயல்பட்டு வருவதை கண்டிக்கும் வகையில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



திமுக அரசின் இரட்டை வேடம் மற்றும் அதன் தலைவர்களின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பாஜகவினர் இன்று கருப்பு சட்டை அணிந்துள்ளனர்.

மத்திய அரசில் பாஜக பொறுப்பேற்ற பின்னர் இரு மாநிலங்களுக்கும் தேவையான தண்ணீரை சம பங்கீடாக வழங்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் தமிழகத்திற்கு 177 டி.எம்.சி தண்ணீர் கிடைத்திருக்கிறது.

நடந்து முடிந்த கர்நாடக மாநில தேர்தலில் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம். அதற்காக ஒன்பதாயிரம் கோடி ஒதுக்குவோம் என தேர்தல் வாக்குறுதியிலேயே காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்த நிலையில் தமிழக முதல்வர் அதற்கு கண்டனம் தெரிவிக்காமல், இன்றைய தினம் பெங்களூரில் நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் காவிரி பிரச்சனை குறித்து பேசாமல் கூட்டணி என்ற பெயரில் தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசோடு இணக்கம் காட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதே நிலை தொடருமானால் வீதிகளில் இறங்கி பாஜக போராடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...