தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் ரூ.1000 என்பது கண்டிக்கத்தக்கது - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

தேர்தலுக்கு முன்பு அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக அறிவித்தது. ஆனால், தற்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டுமே ரூ.1,000 வழங்கப்படும் என கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.



கோவை: மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தகுதியானவர்களுக்கு மட்டுமே ரூ.1000 என்பது கண்டிக்கத்தக்கது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது,



நூலகம் திறப்பது நல்ல விஷயம், அது ஒரு அறிவு சார்ந்த விஷயம் என்பதால் வரவேற்கத்தக்க விஷயம். அனைத்து ஊர்களில் திறந்தாலும் நல்லது தான்.

மகளிர் உரிமை திட்டத்தை பொறுத்தவரை திமுக தேர்தலுக்கு முன்பு அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள். ஆனால் வெற்றி பெற்ற பிறகு தகுதியான பெண்களுக்கு மட்டும்தான் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறுவது கண்டிக்க கூடிய விஷயம்.

தேர்தலுக்கு முன்பு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் நல்ல அரசு. எனவே வாக்குறுதி அளித்தபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கட்டாயம் வழங்க வேண்டும் என்பதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு.

நான் தற்பொழுது என்னுடைய இளைய மகனின் அடுத்த படத்திற்கான பட பூஜைக்காக வந்துள்ளேன். அவரது பட பூஜை பாலக்காட்டில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள தான் நான் வந்துள்ளேன். விஜய பிரபாகரனின் இசைக்கச்சேரி இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப்பெரிய அளவில் மும்பையில் நவம்பர் 25ம் நடைபெற உள்ளது.



கேப்டன் விஜயகாந்த் நன்றாகவும் சிறப்பாகவும் இருக்கிறார். முக்கியமான நேரங்களில் தொண்டர்களை கட்டாயம் அவர் சந்திப்பார். நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருத்தவரை எங்களுடைய பணிகளை நாங்கள் செய்து வருகிறோம்.

அனைத்து மாவட்டங்களிலும் எங்களுடைய உட்கட்சி தேர்தல் முடிந்து விட்டது. இதற்கு அடுத்த செயற்குழு, பொதுக்குழு உள்ளிட்டவற்றை தலைமை கழகம் விரைவில் அறிவிக்கும். அதனை அடுத்து தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் கட்சியின் வளர்ச்சி அதற்குப் பிறகு தேர்தலுக்கு முன்பு கூட்டணியா இல்லையா என்பதை தலைவர் உரிய முறையில் அறிவிப்பார்.

மக்கள் எந்தக் கூட்டணியை ஏற்று கொள்கிறார்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியா முழுவதும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று எண்ணினாலும் அந்த கட்சிகளுக்குள்ளேயே (பாஜக) பல்வேறு வேறுபாடுகள் உள்ளது. எனவே இறுதியில் மக்கள் எந்த கூட்டணியை ஏற்றுக் கொள்கிறார்கள் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...