கோவையில் கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் அங்கேயே சமையல் செய்து காத்திருப்பு போராட்டம்!

பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கோவை மாவட்ட தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.



கோவை: கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த காத்திருப்பு போராட்டத்தில், அடிப்படை பணியாளர்கள் முதல் அமைச்சுப் பணியாளர்கள் வரை உள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆய்வக உதவியாளர் பணியிடத்தில் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணியிட மாறுதல் கேட்கும்போது பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.

அனைத்து அலுவலகங்களிலும் பிரிவு எழுத்தர்கள் சுயமாக சுதந்திரமாக பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். மாதம் ஒரு நாள் மாவட்ட அளவில் மாவட்ட கல்வி அலுவலர் ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் முதன்மை கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரக்கூடிய அருண்குமார் அமைச்சு பணியாளர்களுக்கான எதிரான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவரை இடமாற்றம் செய்யவும் வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், அவர்களுடன் காவல்துறையினர், கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...