கோவையில் வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!

மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சூர்யா (21) என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், கோவை மாவட்ட எஸ்.பி பரிந்துரையின்படி, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவின் பேரில், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.



கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சூர்யா (21) மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு வந்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலன் என்பவரது மகன் சூர்யாவை (21) காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கைது செய்யப்பட்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். 

இந்த உத்தரவின்படி வழிப்பறி வழக்கு குற்றவாளியான சூர்யா(21) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள சூர்யாவிடம் வழங்கப்பட்டது.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...