பொள்ளாச்சி அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது!

பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு சரக்கு ஆட்டோ மூலம் கடத்த முயன்ற, 1,150 கிலோ அளவிலான ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட சரக்கு ஆட்டோ ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி - தாவளம் சாலை ராமபட்டணம் சிவன் கோவில் அருகே குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த கேரளா பதிவெண் கொண்ட சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அதில், தமிழக அரசால் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி, 50 கிலோ எடை கொண்ட, 23 மூட்டைகளில் மொத்தம், 1,150 கிலோ இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்த பாலக்காடு மூலத்துறை பள்ளிவாசல் வீதியை சேர்ந்த காதர் பாஷாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில், பொள்ளாச்சி மாப்பிள்ளை கவுண்டன் புதுாரை சேர்ந்த சாதிக் அலி மற்றும் அஜித் ஆகியோர், மண்ணுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசி குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் கொழிஞ்சாம்பாறை தவ்பிக்கிடம் கள்ளசந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருமாறு கூறியது தெரிய வந்தது.

இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ, கார் மற்றும் இரண்டு மொபட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், காதர்பாஷாவை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சாதிக் அலி, அஜித், தவ்பிக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...