தாழ்த்தப்பட்டவர் மட்டுமே துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற அரசாணையை எரித்து தாபெதிக போராட்டம்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் துப்புரவு பணியிடங்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் விண்னப்பிக்க வேண்டும் என்ற அரசானையை கண்டித்து கோவையில் அரசானை நகலை எரித்து போராட்டம் மேற்கொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் காலியாக உள்ள 20 துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என சமீபத்தில் அரசானை வெளியிடப்பட்டது. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் எதிப்பு தெரிவித்துள்ளது.மேலும் இந்த அரசானை குலத்தொழிலுக்கு வழி வகுக்கும் என தெரிவித்து, அரசானை நகலை எரிக்கும் போராட்டம் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு நடைபெற்றது.

கழக அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர் தொடர்ந்து போராட்டத்தின் போது அரசானையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செய்தனர். இது குறித்து அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி கூறுகையில் தாழ்த்தப்பட்ட மக்களை குலத்தொழிலுக்கு திரும்ப அழைக்கும் வகையில் இந்த அரசானை உள்ளதாகவும், இது திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...