தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு பருவமழை பெய்யாததால் பல்வேறு மாவட்டங்களில் பெரும் வறட்சி நிலவி வருகிறது. இதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் வறட்சி காரணமாக இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குன்னூரில் 43.6 அடி கொள்ளவு கொண்ட ரேலியா அணையில் தற்போது 31.7 அடி தண்ணீர் உள்ளது. தற்போது குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு ஜிம்கானா, நீர் தேக்கத்திலிருந்தும் கிரைசிஹில் பகுதியிலிருந்தும் குழாயிகளிலும், லாரிகள் மூலமாகவும் தற்போது தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. ஆகையால் குன்னூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வாய்ப்புகள் இல்லை என்றும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.