மல்யுத்த வீரர்களுக்கு நீதிகேட்டு கோவையில் ரயில் நிலையம் முற்றுகை!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI, உள்ளிட்ட அமைப்புகள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்.பி.யை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மல்யுத்த பயிற்சி சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பி யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர்கள் பல நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற மல்யுத்த வீரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் போடவும் முன்வந்தனர். 

பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பதக்கங்கள் வீசும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவையில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு அளித்தும், பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தியும SFI, DYFI, உள்ளிட்ட அமைப்புகள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தியும், அவர்களது அமைப்பின் கொடிகளை ஏந்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



பின்னர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட நபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். 



இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...