இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்!

கோவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு காவல் நிலையங்களை திறந்து வைத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, கோவை மாநகரில் ஏற்கனவே 15 காவல்நிலையங்கள் இருந்த நிலையில், தற்போது, 20 காவல்நிலையங்களாக உயர்ந்துள்ளது. குற்றங்களை தடுக்க இந்த காவல் நிலையங்கள் இணைப்பு அவசியம் என்றும் அவர் கூறினார்.


கோவை: கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கவுண்டம்பாளையம், ஆத்துப்பாலம், சுந்தராபுரம் மற்றும் கோவை தெற்கு மகளிர் காவல் நிலையம் உட்பட 4 புதிய காவல் நிலையங்களை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று திறந்து வைத்தார்.

முன்னதாக போத்தனூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தமிழகத்தில் மொத்தம் உள்ள 1352 காவல் நிலையங்களில் 202 மகளிர் காவல் நிலையங்கள் இருக்கிறது. குறிப்பாக காவல் உட்கோட்டங்களுக்கு சுமார் 5 முதல் 10 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளது.

ஒவ்வொரு உட்கோட்டத்திற்கும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து 10 காவல் நிலையங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 1570 காவல் நிலையங்களாக உயர்ந்துள்ளது. கோவை மாநகர் தெற்கில் புதிதாக மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எளிதாக சென்று புகார் அளிக்க முடியும்.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கார் வெடிப்பு நிகழ்விற்கு பிறகு கோவை மாநகர காவல் நிலையங்களை வலுசேர்க்கவும், விரிவாக்கம் செய்யவும் முதல்வர் உத்தரவின் பேரில் 3 கூடுதல் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவை துடியலூர் , வடவள்ளி காவல் நிலையங்கள் மாநகர காவல் துறையில் இணைய உள்ளது.

கோவை மாநகரில் 15 காவல் நிலையங்கள் இருந்த நிலையில் தற்போது மாநகரில் 20 காவல் நிலையங்களாக உயர்ந்துள்ளது. குற்றங்களை தடுக்க இந்த காவல் நிலையங்கள் இணைப்பு அவசியம். சைபர் குற்றங்கள் அதிகளவு உள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இணையவழி குற்றங்களுக்கு 1930 எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.

இணைய வழி குற்றங்களை பொறுத்தவரை அதிக பணம் முதலீடு செய்யும் வரை காத்திருந்து அதிக பணம் சேர்க்க வேண்டுமென ஆசைக்காட்டி பிறகு ஏமாற்றுவார்கள் அவ்வாறு நீங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தால் உடனடியாக 1930 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.

இக்குற்றங்களில் உள்ளூர் அல்லது இந்தியாவிற்குள் உள்ள குற்றவாளிகளை எளிதாக பிடித்து விடும் நிலையில், வெளிநாடு குற்றவாளிகளை பிடிப்பதில் சிறிது சிரமம் உள்ளது. காவல்துறை சார்பில் மக்களுக்காக காவல் உதவி என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 66 வகையான உதவிகளை பெற முடியும். ஆனால் இந்த செயலியை பலரும் பதிவிறக்கம் செய்யவில்லை. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் செயலிகளாவும் மிகவும் பயனுள்ள செயலியாக இருக்கும்.

தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் வருமானவரித்துறை சோதனையின் போது அதிகாரிகளின் வாகனங்கள் சேதப்படுத்தியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அதற்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்து விட்டார் என பதில் அளித்தார். 

மேலும் காவலர்களின் பதவி உயர்வு குறித்தான கேள்விக்கு 130 இன்ஸ்பெக்டர்களுக்கு ஓரிரு மாதங்களில் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் அதனை தொடர்ந்து 1030 உதவி இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...