இச்சிப்பட்டி ஊராட்சியில் கள்ளச்சாராய விற்பனை அமோகம் - கிராமசபை கூட்டத்தில் மக்கள் சரமாரி கேள்வி!

பல்லடம் அடுத்த பெத்தாம்பூச்சி பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இச்சிப்பட்டி ஊராட்சி முழுவதும் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டி அதிகாரிகளிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி ஊராட்சி முழுவதும் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இச்சிப்பட்டி ஊராட்சியில் கடந்த மே 1ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராம மக்களை வரவழைத்து விட்டு ஊராட்சி தலைவரும் வார்டு உறுப்பினர்களும் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.

இதன் காரணமாக தங்களது குறைகளையும் புகார்களையும் ஊராட்சி நிர்வாகத்திடம் சொல்ல முடியவில்லை என்றும், மீண்டும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இச்சிப்பட்டி கிராம மக்கள் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெத்தாம்பூச்சிபாளையத்தில் மீண்டும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரவில்லை. 100 குடும்பங்கள் பயன்படுத்தக்கூடிய பொது வழித்தடத்தை ஊராட்சி நிர்வாகத்தின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டும் இதுவரை சாலை அமைத்து தரவில்லை எனக்கூறி பொதுமக்கள் ஊராட்சி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக இச்சிப்பட்டி ஊராட்சியில் பல்வேறு இடங்களில் போலியான மது பாட்டில்கள் சட்ட விரோதமாக விற்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளிகள் வேலைக்கு வராமல் தொழில் பாதிப்பு அடைவதாகவும் கிராம சபை கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் திடீரென ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போலி மது பாட்டில்கள் விற்பனை குறித்து பலமுறை ஊராட்சி தலைவரிடமும் காவல்துறையிடமும் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலி மது பாட்டில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் வேலுமணியிடம் கேட்டபோது, போலி மது பாட்டில் விற்பனையை தடுக்கும் வகையில் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். காவல்துறையிலும் மனு அளித்துள்ளோம் எனவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதனிடையே கிராம சபை கூட்டத்தில், தங்களது கோரிக்கைகள் குறித்து பேச வந்த பொது மக்களுக்கு மைக் கொடுக்காமல் எதுவாக இருந்தாலும் மனுவாக கொடுங்கள் என பொதுமக்களை பேசவிடாமல் தடுத்த நிகழ்வும் அரங்கேறியது.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...