கோத்தகிரியில் கஞ்சா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

கோத்தகிரி அருகே உள்ள கெரடா மற்றும் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கஞ்சா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் குன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் போலீசார் கஞ்சா பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தனர்.


நீலகிரி: கோத்தகிரி பேருந்து நிலையத்தில் கஞ்சா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோத்தகிரி அருகே உள்ள கெரடா மற்றும் கோத்தகிரி பஸ் நிலையத்தில் கஞ்சா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை முன்னெடுக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளார்.

கஞ்சா போதை குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார். இதன் அடிப்படையில் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் கோத்தகிரி நகர் பகுதி மற்றும் கெரடா கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை வழங்கினர். இந்த நிகழ்வில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி, கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுமான்கான், யாதவ்கிருஷ்ணன் மற்றும் கோத்தகிரி போலீசார்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...