‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை கண்டித்து கோவையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்!

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத நல்லிணக்கத்தை கெடுக்கும் புர்கா, பர்ஹானா, தி கேரளா ஸ்டோரி உள்ளிட்ட படங்களை தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: மதநல்லிணக்கத்தை கெடுக்கும் புர்கா, பர்ஹானா, தி கேரளா ஸ்டோரி ஆகிய படங்களை தடை செய்ய வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்மையில் வெளியான தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

கோவையில் இந்த திரைப்படம் வெளியான அனைத்து திரையரங்குகள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம், திரையரங்கு முற்றுகை ஆகியவை நடைபெற்றது.



அதன் தொடர்ச்சியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உள்ள புர்கா, பர்ஹானா, தி கேரளா ஸ்டோரி உள்ளிட்ட படங்களை தடை செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...