இடிகரையில் விநாயகர் கோவில் அகற்றம் - பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர்!

இடிகரை அடுத்த வெற்றி வேலா நகர் பகுதியில் பொதுமக்கள் சார்பில் பொது இடத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை எடுக்க பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியிருந்த நிலையில், சிலை அகற்றப்படாமல் இருந்ததால், அதிகாரிகள் சிலையை அகற்றியதை தொடர்ந்து, பேரூராட்சி அலுவலகத்தை இந்து முன்னணி அமைப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: இடிகரை பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர் கோவில் அகற்றப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்ட வெற்றி வேலா நகர் மற்றும் ராகவேந்திரா கார்டன் ஆகிய பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் பொதுமக்கள் வழிபட வசதியாக அந்த பகுதிகளில் உள்ள ரிசர்வ் சைட்டுகளில் அப்பகுதி மக்கள் சார்பில் விநாயகர் கோவில் கட்டப்பட்டது.

ஆனால் வெற்றி வேலா நகர் மக்கள் பொது இடத்தில் விநாயகர் சிலையை வைத்துள்ளனர். மேலும் இந்த விநாயகர் கோவிலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் பொது இடத்தில் உள்ள விநாயகர் சிலையை எடுக்க அறிவுறுத்தி இருந்தனர்.



ஆனால் சிலை அகற்றப்படாமல் இருந்து வந்த நிலையில், இன்று பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று கோவிலை இடித்து விநாயகர் சிலையை பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.



தகவலறிந்து இந்து முன்னணியினர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



இதனையடுத்து பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், ஆய்வாளர் தாமோதரன், பேரூராட்சி தலைவர் ஜெனார்த்தனன், செயல் அலுவலர் விஜயகுமார் ஆகியோர் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறிய இடத்தில் விநாயகர் சிலையை நிறுவி கொள்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.



பின்னர் முற்றுகையிட்ட அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் பொதுமக்கள் அலுவலகத்தில் இருந்த விநாயகரை மீட்டனர்.



திரும்பி செல்லும் போது அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் அந்த விநாயகர் சிலையை பார்த்ததும் பயபக்தியுடன் வழிபட்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...