பல்லடம் அருகே கோளறுபதி நவகிரக கோட்டையில் மழை வேண்டி சிறப்பு பூஜை - பெண்கள் பங்கேற்று வழிபாடு!

பல்லடம் அருகே சித்தம்பலம் பகுதியில் உள்ள கோளறுபதி நவகிரக கோட்டையில் மழை வேண்டி நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜை மற்றும் சங்க அபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்று மழை வேண்டி வழிபாட்டில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் நடைபெற்ற சிறப்பு விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள கோளறுபதி நவகிரக கோட்டையில் இன்று மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை மற்றும் சங்காபிஷேக விழா மற்றும் வருண மகா மந்திர வேள்வி நடைபெற்றது.



இத்திருத்தலத்தில் சிவபெருமானை மையமாக வைத்து 27 நட்சத்திரங்கள் 9 அதி தேவதைகள் ஒன்பது நவகிரகங்கள் 108 சிவலிங்கங்கள் அழகிய நவகிரக கணபதி உள்ளிட்ட தெய்வங்கள் அமைந்துள்ளது.



இன்று உலக மக்கள் நோய் நொடி இல்லாமல் நலமாக வாழவும்,மழை வேண்டியும் 108 சங்காபிஷேக விழா மற்றும் பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை விழா நடைபெற்றது.



இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்று திருவிளக்கு ஏற்றி நவகிரக நாயகருக்கு சிவ நாம பஜனைகள் பாடி சிறப்பு வழிபாடு நடத்தினர்.



இந்த சிறப்பு வழிபாட்டில் சிவபெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...