உடுமலை பேருந்து நிலையத்தில் சேதமடைந்த நடைபாதை - உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

உடுமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் வந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் கூடிய நடைபாதையின் தரைப்பகுதி மற்றும் கைப்பிடி சேதமடைந்து பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளதால் உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் மையப்பகுதியில் மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து சுற்றுப்புற கிராமங்கள், மற்றும் வெளி மாவட்டங்களுக்கு நாள்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்து வருகை தருகின்ற பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கின்றது.

இதன் காரணமாக காலை முதல் மாலை வரையிலும் பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்குள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கு ஏதுவாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபாதை அமைக்கப்பட்டது.



பேருந்து நிலையத்தின் நுழைவு பகுதியில் இருந்து எல்லை முடியும் வரையிலும் பக்கவாட்டு கைப்பிடியுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டது. சிறிது காலம் பயன்பாட்டில் இருந்து வந்த நடைபாதை முறையான பராமரிப்பு இல்லாமல் அடித்தளம் மற்றும் பக்கவாட்டு கைப்பிடியானது பல மாதங்களாகவே சேதமடைந்து காணப்படுகிறது.



மேலும் நடைபாதை அமைக்கப்பட்டதற்கான நோக்கமும் அதற்கான நிதியும் வீணாகி வருகிறது. பொதுமக்களுக்காக தொடங்கப்படுகின்ற எந்த ஒரு சேவையும் திட்டமும் தக்க தருணத்தில் முறையாக சீரமைத்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டியது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் கடமையாகும். ஆனால் அலட்சியம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடுமலை மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பாதசாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...