பாசிச சக்தியால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நந்தினிக்கு உரிய நீதி வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூரைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி நந்தினி பாலியல் வன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய நீதி வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நந்தினியை ஏமாற்றி தனது சமூக விரோத கூட்டாளிகளோடு பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு கொடூரமாக கொலை செய்த இந்து பாசிச சக்திகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். வழக்கு விசாரணை வரும் வரை குற்றவாளிகளை பிணையில் வெளியிடக் கூடாது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜசேகரை வழக்கில் இணைத்து கைது செய்ய வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை கடுமையாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாவட்ட தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் மாநிலக் குழு உறுப்பினர் தி.செ.கோபால், தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கோதவாடி ராசன், அமைப்புச் செயலாளர் தாமரை வீரன், மாநகர தலைவர் புதூர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ஆ.நாகராசன் கண்டன உரையாற்றினார். 

தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், மாவட்டச் செயலாளர் முருகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...