தமிழக சிறைகளில் 2,000 கைதிகளுக்கு ஒரே மாதத்தில் யோகா கற்றுக் கொடுத்த ஈஷா!‌

சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்பட தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள 73 சிறைகளில்‌ உள்ள  2,000க்கும்‌ மேற்பட்ட கைதிகளுக்கு மன அழுத்தத்தை போக்கவும், உடல் நலனை பாதுகாக்கவும் ஈஷா சார்பில்‌ யோகாசன பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளது.


கோவை: ஈஷா யோகா மையம்‌ சார்பில்‌ ஒரே மாதத்தில்‌ சிறைகளில்‌ உள்ள 2,000க்கும்‌ மேற்பட்ட கைதிகளுக்கு யோகா கற்று கொடுக்கப்பட்டு உள்ளது.

சிறைகளில்‌ இருக்கும்‌ கைதிகள்‌ குடும்பத்தினரை பிரிந்து தனிமையில்‌ வாழ்வதால்‌ மன அழுத்தம்‌, உடல்‌ நல‌ பாதிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர்‌.

இந்த பிரச்சினைகளில்‌ இருந்து அவர்கள்‌ வெளி வர உதவும்‌ விதமாக அவர்களுக்கு சிறப்பு யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.



அதன்படி, நடப்பு ஏப்ரல்‌ மாதத்தில்‌ மட்டும்‌ சென்னை, கோவை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில்‌ உள்ள மத்திய சிறைகள்‌, பிற மாவட்டங்களில்‌ உள்ள மாவட்ட சிறைகள்‌ மற்றும்‌ கிளை சிறைகள்‌ என மொத்தம்‌ 73 சிறைகளில்‌ சிறப்பு யோகா வகுப்புகள்‌ நடத்தப்பட்டன.



சத்குருவால்‌ பயிற்சி அளிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள்‌ சிறைக்கு நேரில்‌ சென்று உயிர்‌ நோக்கம்‌, உப யோகா, சூரிய சக்தி போன்ற வெவ்வேறு விதமான யோகா பயிற்சிகளை கைதிகளுக்கு கற்றுக்கொடுத்தனர்‌.



இவ்வகுப்புகளில்‌ ஆண்கள்மற்றும்‌ பெண்கள்‌ கைதிகள்‌ மிகுந்த ஆர்வத்துடன்‌ பங்கேற்றனர்‌. இப்பயிற்சிகளை சிறை கைகிகள்‌ தினமும்‌ செய்து வருவதன்‌ மூலம்‌ மன அழுத்த‌ பாதிப்பில்‌ இருந்து விடுபட முடியும்‌.

மேலும்‌, முதுகுத்தண்டு வலுப்பெறும்‌, மூட்டு வலியில்‌ இருந்து விடுதலை பெறலாம்‌. உடல்‌ ஆரோக்கியம்‌ மேம்படும் என ஈஷா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...