எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் அடிப்படைவசதிகள் செய்க..! - கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சுமை தூக்குவோர் நலச் சங்கத்தினர் மனு அளித்தார்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எம்ஜிஆர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எம்ஜிஆர் மார்க்கெட் சுமைதூக்குவோர் நல சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதில், எம்ஜிஆர் மொத்த காய்கனி மண்டியில் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், குடிநீர் வசதி செய்து தர வேண்டும், மழை நீர் வடிகாலை அவ்வப்போது சீரமைத்து கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கான்கிரீட் சாலைகள் அமைத்து தர வேண்டும், உணவு அருந்துவதற்கும் உடை மாற்றுவதற்கும் பொருட்களை பத்திரமாக பாதுகாத்திடவும் காலியிடம் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட இந்த கோரிக்கை மனு, கோவை மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி துணை ஆணையாளர், மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையாளர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...