கோவையில் பிளாஸ்டிக் நுகர்வு குறித்த விழிப்புணர்வு - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ நாளை பூமி தினத்தை முன்னிட்டு மாநகராட்சி மற்றும்‌ கட்டிடக்கலைஞா்களுடன்‌ இணைந்து உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ பிளாஸ்டிக்‌ நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, மனித இயற்கை இணைப்பின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்‌ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.


கோவை: உக்கடத்தில் பிளாஸ்டிக்‌ நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, மனித இயற்கை இணைப்பின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்‌ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஏப்ரல்‌ 22ஆம்‌ நாள்‌ பூமி தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மற்றும்‌ கட்டிடக்கலைஞா்களுடன்‌ இணைந்து உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ பிளாஸ்டிக்‌ நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, மனித இயற்கை இணைப்பின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்‌ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அலை என்பது மாற்றம்‌ மற்றும்‌ வாழ்க்கை சுழற்சிகளின்‌ வெளிப்பாடு ஆகும்‌.

கோயம்புத்தூர்‌ மலையடிவாரத்திலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவு பிளாஸ்டிக்‌ பாட்டில்கள்‌ வாயிலாக நமது இயற்கை வளத்தை பிளாஸ்டிக்‌ அழிவுத் தாக்கத்தை பிரதிபலிக்கும்‌ வகையில்‌ அலை வடிவம்‌ வாயிலாக பிரதிபலிக்கின்றன. மலையடிவாரங்கள்‌ மற்றும்‌ வனப்பகுதிகளிலிருந்து டன்‌ கணக்கில்‌ பிளாஸ்டிக்‌ சேகரிக்கப்படுகிறது.

இந்நிகழ்வு மனிதனால்‌ உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்‌ வாயிலாக நடைபெறும்‌ இந்த இயற்கை நிகழ்வில்‌ நமக்கும்‌ இயற்கைக்கும்‌ இடையே உள்ள தொடா்பை பிரதிநிதித்துவப்படுத்தவும்‌, சக வாழ்வின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும்‌ பயன்படுத்தப்படுகிறது.

கலை அதன்‌ வழியில்‌ திரவமாக பார்வையாளர்கள்‌ தங்களை தனித்துவமான கலையுடன்‌, வழிகள்‌ மற்றும்‌ விளக்கங்களுடன்‌ இணைக்க அனுமதிக்கின்றது. அனைவருக்கும்‌ எனது இனிய பூமி தின வாழ்த்துக்களை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌ என மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...