கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கு சலுகை கேட்டு முதல்வர் தனித் தீர்மானம் - பாஜக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு

கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் அனைத்து சலுகைகள் வழங்க கோரி் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரும்படி மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டுவந்த தனித் தீர்மானம் பட்டியலின மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளதாக, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.



சென்னை: இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, பட்டியலின மக்களுக்கான பாதுகாப்பு உரிமைகள், இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளை, கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் வழங்க கோரி் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.



அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், "பட்டியலின ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்கனவே பட்டியலினத்து மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிற பலனை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி அந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என பாஜக சார்பில் நாங்கள் சில கருத்துக்களை முன்வைத்தோம்.

மதம் மாறிய பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் அரசின் இடஒதுக்கீடு சலுகையை ஆராய்வதற்கு மத்தியிலே மோடி தலைமையிலான அரசு 2022 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி K.G. பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்த குழு இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.



அவர்களுக்கு அந்த உரிமை கிடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு அதனுடைய விசாரணை கடந்த வாரம் கூட நடைபெற்றது. மேலும் இது ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இது தொடர்பான விவகாரங்களை மத்திய அரசு மேற்கொண்டு வரும்போது, உச்ச நீதி மன்ற வரம்பிற்கு உள்ள ஒரு விவகாரத்தில், மாநில அரசு ஏன் இந்த தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என பாஜக முன் வைக்கிறது.

கிறிஸ்துவத்திற்கும் இஸ்லாமியத்திற்கும் மதம் மாறினால் கூட தொடர்ச்சியாக தீண்டாமை கொடுமை பட்டியல் இன மக்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை இந்த தீர்மானம் மறைமுகமாக சொல்ல வருகிறதா என்று நாங்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினோம்.



பட்டியலிட மக்களின் மேம்பாட்டுக்காக சமூக நீதி அரசு, திராவிட மாடல் அரசு எனக் கூறும் திமுக அரசு, வேங்கை வயல் பிரச்சனை, பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான சிறப்பு சட்டம், ஒவ்வொரு வாரமும் கௌரவ கொலைகள் தமிழகத்தில் நடந்து வருகிறது இதனை தடுப்பதற்கான சட்டம் இவற்றைப்பற்றி எல்லாம் எதையும் கவலைப்படாத திமுக முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக இந்த தீர்மானம் கொண்டுள்ளது என பாஜக கருதுகிறோம் இந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள், வெளிநடப்பு செய்துள்ளோம்.

இன்னும்கூட தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு பொதுவான மாயானம் கிடையாது. இவை அனைத்தும் மாநில அரசின் விவகாரத்தில் வரம்பில்வரும் நிலையில், அந்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு அரசியல் காரணங்களுக்காக ஏமாற்றக்கூடிய வகையில் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

அடிப்படையில் மதம் மாறுபவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறார்கள்? மதம் மாறினாலும் மக்களுக்கு தீண்டாமை நிலவுகிறது. பட்டியல் என மக்களுக்கு பொது மாயானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில், இதையெல்லாம் சரி செய்யாமல், கண் துடைப்பிற்காக இதையெல்லாம் இந்த அரசு செய்கிறது என்பதுதான் எங்களுடைய வாதம்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...