வால்பாறை அருகே வனத்துறை பயிற்சி மையத்தில் கலந்தாய்வு கூட்டம்

வால்பாறை அட்டக்கட்டி பயிற்சி மையத்தில் வனத்துறை, மின்சார துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வனவிலங்குகள் உயிரிழப்பை தடுப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



கோவை: வால்பாறையில் வனவிலங்கு உயிரிழப்பை தடுப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம் பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய நான்கு வனச் சரகத்திற்கு உட்பட்ட வனத்துறையினர், மின்சார துறையினர், வருவாய்த்துறையினர், காவல் துறையினர் இணைந்து அட்டகட்டி பயிற்சி மையத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.



இக்கூட்டத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் மற்றும் வனவிலங்குகள் உயிரிழப்பதை எவ்வாறு தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.



இதில் மின் வாரியத்திற்கு தகவல் அளிக்காமல் விவசாய நிலங்களுக்கு மின் வேலி அமைப்பதை தடுக்கவும், மின் வேலியினால் வனவிலங்குகள் இறந்தால் 1972 வன சட்டப்படி 3 முதல் 7 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் தொகுதி அலுவலகத்தில் Delimitation எதிர்ப்பு: திமுக கருப்புக்கொடி போராட்டம்

கோயம்புத்தூர் தொண்டாமுத்தூரில் மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகிகள்...

சிங்காநல்லூரில் ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.10.18 கோடி தங்கம், வைர நகைகள் பறிமுதல்

சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள கொடிசியா பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஏப்ரல் 15ம் தேதி வேனில் ஆவணமின்றி கொண்ட...

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் தேர்தல் பயிற்சி வகுப்பு ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026க்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Pra...

தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம்

Coimbatore மாவட்டத்தில் ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் வீட...

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...