கோவை குறிச்சியில் போதை மாத்திரை விற்பனை - இளைஞர் கைது

கோவை குறிச்சி அடுத்த வெங்கடாசலபதி நகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், அபூபக்கர் சித்திக் (29) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 40 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் குறிச்சி அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 40 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

கோவை குறிச்சி வெங்கடாச்சலபதி நகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போத்தனூர் காவல் ஆய்வாளர் கதிர்வேல் தலைமையில் சென்ற போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த அபூபக்கர் சித்திக் (29) என்பவர் போதை மாத்திரைகளுடன் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் இவர் அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அபுபக்கர் சித்திக்கை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 40 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...