பேருந்து செல்ல வழிவிட்ட காட்டு யானை- வைரலாகி வரும் வீடியோ!

கோவை ஆனைகட்டி சாலை தூமனூர் பிரிவு அருகே ஒற்றைக்காட்டு யானை ஒன்று மலைப்பகுதியில் இருந்து வெளியேறி உள்ளது. அப்போது அந்த வழியாக வந்த பேருந்து செல்ல காட்டுயானை வழிவிட்டு நின்றது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.



கோவை: கோவை ஆனைகட்டி அருகே வனப்பகுதியில் சென்ற பேருந்துக்கு காட்டு யானை வழிவிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோவை ஆனைகட்டி, மாங்கரை, தடாகம் பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் உள்ளன.

தற்போது கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் எந்நேரத்திலும் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து வெளியேறலாம் எனவும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனதுறையினர் தெரிவித்து வருகின்றனர்.



பல சமயங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்களை காட்டு யானைகள் வழிமறித்துள்ளன. இந்நிலையில் இன்று காலை ஆனைகட்டி சாலை தூமனூர் பிரிவு அருகே ஒற்றைக்காட்டு யானை ஒன்று மலைப்பகுதியில் இருந்து வெளியேறி உள்ளது.



அச்சமயத்தில் பேருந்து ஒன்று வழியாக வந்ததை கண்ட அந்த யானை பேருந்துக்கு வழிவிட்டு ஒதுங்கியுள்ளது. இதனை பேருந்தில் இருந்த பயணிகள் அவர்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அதேசமயம் அனைத்து யானைகளும் வாகனங்களுக்கு வழி விடாது எனவும் சில சமயங்களில் வாகனங்களை துரத்த கூடும் என்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...