கிராமிய கலைகளை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது..! - நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் பாராட்டு!

கோவையில் நடைபெற்று வரும் முதல்வர் ஸ்டாலின் குறித்த எங்கள் முதல்வர் எங்கள் பெருமை எனும் கண்காட்சியை நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், நாட்டுப்புற கலைகள், கலைஞர்களை தமிழக அரசு ஊக்குவித்து வருவதாக தெரிவித்தார்.



கோவை: நாட்டுப்புற கலைகளையும், கலைஞர்களையும் தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது என்று நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை வ.உ.சி., மைதானத்தில் "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்ற முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. தினமும் புகைப்பட கண்காட்சியை காண ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும், மாலையில் தினமும் ஒவ்வொரு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றது.



இந்நிலையில், இன்று நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் இந்த கண்காட்சியை பார்வையிட்டார்.



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் அத்தனை தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளும் ஆட்சியில் மிகப்பெரிய வரலாறுகள் இருந்த காலகட்டத்தில் இருந்து, ஒவ்வொரு விஷயமும் மிகப்பெரிய வரலாறாக இருந்து வருகிறது.

அத்தனை வரலாறுகளும், இன்றைக்கு தமிழக முதல்வராக இருந்து தன்னை, சாதாரண மனிதனாக ஆக்கி மக்களுக்கு எப்போதும் தொண்டனாக இருக்க வேண்டும், மக்களுடைய தொண்டனாக, இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம்.

பல்வேறு திட்டங்கள் ஒரு சிறிய விஷயங்களை கூட அவர் விட்டதில்லை. 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட எத்தனையோ திட்டங்கள், ஏழை எளிய மக்களுடைய விவசாய திட்டங்கள், கடன் உதவி திட்டங்கள், மருத்துவ காப்பீடு திட்டங்கள், திருமண உதவித் திட்டம், பள்ளி கல்வி, மருத்துவ உதவி என எத்தனையோ திட்டங்களை, கலைஞர் ஆட்சியில் எப்படி இருந்ததோ, அதேபோல முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், வெகு சிறப்பாக உள்ளது.

மக்கள் எப்பொழுதும் தமிழக முதல்வராக இவர் தான் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அவரது ஆட்சி, வெற்றிவாகை சூடிக் கொண்டு இருக்கிறது. எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்னவென்றால், தலைவர் கலைஞரின் பாடல், கடைசி பாடலை பேசவும், மாநாட்டில் அவர் எழுதிய பாடலை வேல்முருகன் பாட வேண்டும் என்று எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்.

அந்த மேடையில், 23 நாட்டு தலைவர்கள் இருந்த மேடையில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள் தலைவர் பாட வைத்தார். உள்ளபடியே மிகப் பெரிய சந்தோசம், ஒவ்வொரு காலகட்டங்களிலும் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் ஆக இருந்தாலும் சரி, கட்சி பல்வேறு நிகழ்ச்சிகளாக இருந்தாலும், கட்சி பாடல்களாக இருந்தாலும் சரி, சமுதாய பாடல்கள் மற்ற பொதுநல பாடல்கள் பாடுவதற்கு ஒவ்வொரு முறையும் முதல்வர் வாய்ப்பு கொடுத்து மக்கள் கலைஞர்களையும் கிராமிய கலைஞர்களையும் ஊக்குவித்து வருகிறார்.

அதுதான் சென்னை சங்கமம். மிகப்பெரிய வரலாறு கிடைத்தது ஒவ்வொரு நிகழ்வுகளையும் வாய்ப்பு கொடுத்து வருகிறார். கோவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் அற்புதமான அரங்கத்தை அமைத்து தலைவருடைய சின்ன வயதில் இருந்து தற்போது வரை என்னென்ன திட்டங்கள் செயல்பாடுகள் என காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் மிசா சிறையில் இருந்ததை போல் சிறைச்சாலை கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிறை வாசலை பார்த்து பெரியவர்கள் கண்ணீர் விட்டார்கள். சென்னையில் நடைபெற்ற கண்காட்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் அதனை பார்த்து நெகிழ்ந்தார். அதனை பார்ப்பதற்காகவே அங்கு வந்திருந்தார்.

இந்த தருணத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கிராமிய கலைஞர்கள் கிராமத்தில் திருவிழாக்கள் பாடல்கள் பாடுவது மட்டுமில்லாமல் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். மாநில அளவிலும், வெளி நாடுகளுக்கு சென்றும் தங்களுடைய நிகழ்ச்சிகளை நிறைவேற்றி வருகிறார்கள்.

கலைஞர்களுக்கு ஊக்குவிப்பு ஊக்கத்தொகை அனைத்தும் தமிழக முதல்வர் வழங்கி வருகிறார். 40 வயதில் இருந்து 50 வயது வரை உள்ள கலைஞர்களாக இருந்தாலும், அவர்களுக்கு பென்ஷன் வழங்கி வருகிறார்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், திமுக மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மண்டல தலைவர்கள் மீனாலோகு, தனலட்சுமி, நிலைக்குழு தலைவர்கள், ஏர்போர்ட் ராஜேந்திரன், பொறியாளர் அணி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...